நாடே அல்லோகளப்பட்டுட்டுருக்கு.. இப்பக்கூட கவர்ச்சிதான் முக்கியமா? பிரபல நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்
சென்னை: வித்தியாசமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்திருக்கும் பிரபல நடிகையை நெட்டிசன்கள் விளாசி தள்ளியிருக்கின்றனர்.
நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஸாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த், சமூக வலைதளங்களிலும் ஆக்ட்டிவாக உள்ளார். அவ்வப்போது தனது வித்தியாசமான போட்டோக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார்.

லைவில் லிப் லாக்
இதனால் யாஷிகாவுக்கு தமிழ் சினிமா ரசிகர்களை காட்டிலும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகம். அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த். சமூக வலைதள நேரலையில் பேசியபோது அவரது ஆண் நண்பர் ஒருவர் அவருக்கு லிப் லாக் கொடுத்தார். அந்தக் காட்சி நேரலையாக ஒளிபரப்பானது,

நடிகர் விளக்கம்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக முன்னணி நடிகரின் மகனுடன் யாஷிகா ஆனந்து ஊர்சுற்றி வரும் போட்டோக்கள் வெளியாகி வருகிறது. இதனால் நடிகரின் மகனுடன் அவருக்கு காதலா என்று பேச்சு எழுந்தது. ஆனால் காதலெல்லாம் ஒன்றும் இல்லை, இருவரும் ஒன்றாக படத்தில் நடித்து வரும் காட்சிகளின் போட்டோக்கள் அது என நடிகர் விளக்கம் அளித்தார்.

ஷார்ட் டாப்ஸ்
ஆனால் தன்னைப்பற்றி பரவும் எந்த செய்திக்கும் செவி கொடுக்காமல் தனது வேலையில் கவனமாக உள்ளார் யாஷிகா ஆனந்த். வழக்கம் போல கவர்ச்சி தூக்கலாக தனது போட்டோவை வெளிட்டிருக்கிறார். ஃபுல் ஸ்லீவில் டீப் நெக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள ஷார்ட் டாப்ஸை அணிந்திருக்கிறார்.
ஜொலிக்கிறீயே செல்லம்
தொடை வரை மட்டுமே உள்ள அந்த உடை தங்க நிறத்தில் தகதகவென ஜொலிக்கும் வகையில் உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஜொலிக்கிறீயேடா செல்லக்குட்டி என புகழ்ந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் அட்டாக்கிலிருந்து தப்பும் வகையில் ஏதாவது உடையுடன் போட்டோ போடுங்கள் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதான் முக்கியமா?
இன்னும் சில நெட்டிசன்கள் உங்கள் உடை சோன் பப்டி மாதிரி உள்ளது என்று கலாய்த்திருக்கின்றனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் சில நெட்டிசன்கள் சோன் பப்டி ரொம்ப ருசியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், உங்களை ஏன் கொரோன தாக்கவில்லை, மோசமனா ஆட்டிட்யூட். சிட்டியின் தற்போதைய நிலை தெரியும் தானே.. ஆனாலும் மாடலிங்தான் உங்களுக்கு முக்கியமா என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











