யார் பார்த்த வேலைடா இது? TTF Vasan தளபதி.. கூல் சுரேஷ் இளைய தளபதி.. வீடியோவால் வெறியாகும் ரசிகர்கள்!

சென்னை: பிரபல யூடூயூபர் டி.டி.எஃப் வாசனை வைத்து திரு.வி.க. நகர் பூங்கா படத்தினை இயக்கிய இயக்குநர் செல்அம் படம் இயக்கப்போவதாக அறிவித்தார். மேலும் அந்தப் படத்திற்கு மஞ்சள் வீரன் எனப் பெயர் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மஞ்சள் வீரன் படத்தின் போஸ்டர் 2021ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மஞ்சள் வீரன் படத்தின் வேலைகள் நடந்து வருவதாக பேச்சுகள் அடிபட்ட நிலையில், திடீரென சில வாரங்களுக்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் செல் அம், மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்படுகிறார்.

அவருக்கு பதிலாக வேறு ஒருவர் நடிப்பார் என்றார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் மஞ்சள் வீரன் படத்தில் நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் நடிக்கப்போவதாக அறிவித்தார். இந்நிலையில் இது தொடர்பாக இணையத்தில் எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்று உலா வருகின்றது.

goat ttf vasan cool suresh

மஞ்சள் வீரன் படத்தில் இருந்து, டி.டி.எஃப் வாசன் எதற்காக நீக்கப்படுகிறார் என்பதற்கான காரணத்தை சொல்லவில்லை. இவரது இந்த அறிவிப்பு அவரது சப்ஸ்கிரைபர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இது தொடர்பாக தனது யூடூயூப் சேனலில் பேசிய டி.டி.எஃப்.வாசன், இயக்குநர் செல்அம், தன்னை படத்தில் இருந்து நீக்கியதே தனக்கு தெரியாது.

goat ttf vasan cool suresh

இதுபற்றி அவர் ஒரு முறை கூட என்னிடம் பேசவே இல்லை. அதுமட்டுமில்லாமல், அவர் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று சொல்லி இருந்தார். ஆனால், மஞ்சள் வீரன் படத்தின் போட்டோஷூட் மட்டுமே நடந்தது. படப்பிடிப்பு இதுவரை நடக்கவே இல்லை. படபூஜைக்கு கூட நான் தான் பணம் கொடுத்தேன்.

goat ttf vasan cool suresh

டிடிஎஃப் வாசன்: அவர் என்னை மஞ்சள் வீரன் படத்தில் இருந்து நீக்கியது தொடர்பாக பேச அவரை பலமுறை தொடர்பு கொண்டேன். ஆனால், அவர் என் அழைப்பை எடுக்கவில்லை. நான் செலவு செய்த பணத்தில் எனக்கு ஒரு பைசாக்கூட வேண்டாம். ஆனால், எதற்காக என்னை படத்தில் இருந்து நீக்கினார் என்ற காரணத்தை மட்டும் சொன்னால் போதும், பணத்தை வாங்கிக் கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறியிருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.

goat ttf vasan cool suresh

செல்அம்: இதையடுத்து தனியார் யூடூயூப் சேனலுக்கு பேட்டி அளித்த இயக்குநர் செல்அம் டிடிஎஃப் வாசன் மற்றும் அவரது நண்பட் அஜீஸை மிகவும் மோசமாக விமர்சித்தார். இவர்களின் வார்த்தை மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் ரசிகர்கள் பலருக்கும் குபீர் சிரிப்பு வரும் வகையில் எடிட் செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதாவது கோட் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கதாநாயகன் விஜய் மற்றும் வில்லன் விஜய் என இருவரும் வேறு வேறு கேலரியில் இருந்து பார்த்துக் கொள்வதைப்போல் காட்சி வரும். அப்போது வில்லன் விஜய், கதாநாயகன் விஜய்யை பார்த்து, நடனம் ஆடுவார்.

goat ttf vasan cool suresh

அந்த வீடியோவை எடுத்து கதாநாயகன் விஜய்க்கு பதிலாக டி.டி.எஃப். வாசனும், வில்லன் விஜய்க்கு பதிலாக கூல் சுரேஷும் இருப்பதுபோல் எடிட் செய்து வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக இந்த வீடியோ விஜய் ரசிகர்களை கொஞ்சம் கடுப்பேற்றியுள்ளது என்றே கூறவேண்டும். பலரும் இந்த வீடியோவைப் பார்த்து சிரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X