விஜய்க்காக அஜித் எடுத்த முடிவு.. தலயும் தளபதியும் போட்ட மாஸ்டர் பிளான்.. மங்காத்தா ஆட போறாங்களா?

சென்னை: நடிகர் விஜய் தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவில் இருந்து விலகுவதாக முடிவெடுத்தவரான விஜய், தனது கட்சியை 2026ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு தயார் செய்து வருகிறார். இப்படி இருக்கும்போது நடிகர் விஜய் மற்றும் அஜித் இணைந்து ஒரு பக்காவான மாஸ்டர் பிளான் போட்டுள்ளதாக இணையத்தில் சிலர் பதிவிட்டு வருகிறார்கள். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் அஜித் அண்மையில் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், கரூர் துயரத்திற்கு ஒருவரை மட்டும் காரணமாக கூறுவது என்பது ஏற்புடையது அல்ல. அதற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இப்படி இருக்கையில் இணையத்தில் சிலர் அஜித்தின் இந்த பேட்டி விஜய்க்கு ஆதரவாக இருக்கிறது என்று தெரிவித்தனர். சிலரோ அஜித் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார் என்று தெரிவித்தனர்.

Netizens Spreading on Social About Ajith Plans To Support Vijay At 2026 Election

இணையத்தில் இப்படியான பேச்சுக்கள் போய்க்கொண்டு இருக்க, அஜித் அளித்த மற்றொரு பேட்டியில் நான் என்றைக்கும் விஜய்க்கு எதிரானவன் கிடையாது. நான் எப்போது விஜய் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைத்துள்ளேன். அப்படித்தான் நினைப்பேன். சில விஷமிகள் அஜித் மற்றும் விஜய்க்கு இடையிலும் அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையிலும் பிரச்னைகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் அதை இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது என்று தெரிவித்திருந்தார்.

அஜித் ஆதரவு?: அஜித் இவ்வாறு தெரிவித்தார் என்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படி இருக்கும்போது தற்போது சிலர் இணையத்தில் ஒரு கருத்துருவாக்கத்தை உருவாக்கி வருகிறார்கள். அதாவது, நடிகர் அஜித் 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து, விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்க போகிறார் என்றும், அது விஜய்க்கு அரசியல் ரீதியாக கட்டாயம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருவதால். சில இணையவாசிகள் தலயும் தளபதியும் இணைந்து பக்காவான மாஸ்டர் பிளான் போட்டு மங்காத்தா ஆடப்போகிறார்களா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Netizens Spreading on Social About Ajith Plans To Support Vijay At 2026 Election

தல தளபதி: விஜய்யின் அரசியல் பயணத்திற்கு அஜித் உறுதுணையாக இருக்கத்தான் அஜித் இவ்வாறு முடிவு செய்துள்ளதாகவும், அதனால்தான் தனது பேட்டி தொடர்பாக விஜய்க்கு எதிராக அஜித் கருத்து தெரிவித்துள்ளார் என்று சிலர் பேசத் தொடங்கியதும் அது குறித்து விளக்கம் கொடுத்தாராம் அஜித். தகவல்கள் இப்படி பரவிக் கொண்டு இருக்க பிரபல இணைய வாசி ஒருவர், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவை டேக் செய்து, இது எல்லாம் உண்மையா என்று கேட்டுள்ளார். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பலரும் சமூக வலைதளங்கள் தொடங்கி பல இடங்களில் தங்களுக்கு சாதகமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள் என்றும் பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அஜித் 64: அஜித் தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அவரது 64வது படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் பரவியது. அதே நேரத்தில் அஜித்தும் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இணைந்து விரைவில் படம் பண்ணப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X