அய்யோ கடவுளே அது கக்கூஸ்மா.. பிக்பாஸ்ல இருந்து வெளியே வந்த பிறகும் மறக்கல போல!
Recommended Video
சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் கக்கூஸ்க்குள் நின்று தன்னைத்தானே வளைத்து வளைத்து வீடியோ எடுத்து வெளியிட்டிருப்பதை நெட்டிசன்கள் செமயாக கலாய்த்திருக்கின்றனர்.
சாக்ஷி அகர்கவால் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே நெட்டிசன்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார்.
காரணம், பிக்பாஸ் வீட்டில் வனிதாவுக்கு தங்கையாக பற்றவைக்கும் வேலையை செய்தார். இதனால் கடுப்பான மக்கள் அவரை அப்போதே திட்ட தொடங்கிவிட்டனர். அதோடு மட்டுமின்றி சாக்ஷியை பாய்சன், ஸ்னேக்ஷி என்றும் பட்டப்பெயர் வைத்து திட்டினர்.

சாக்ஷிக்கு வாய்ப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. டெடி, சின்ட்ரெல்லா உட்பட இன்னும் பல படங்களில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலவையான கருத்து
அதேநேரத்தில் விதவிதமான கவர்ச்சி உடையில் தொடர்ந்து போட்டோ ஷுட்டுகளை நடத்தி போட்டோக்களையும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். இதனை பார்க்கும் நெட்டிசன்கள் கலவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டிவிட்டரில் வீடியோ
அந்த வகையில் நேற்று சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த படுமோசமான போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு வாங்கி கட்டியிருக்கிறார் சாக்ஷி அகர்வால்.
ரெஸ்ட் ரூம்
அதாவது, சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றுள்ள சாக்ஷி அகர்வால், அங்குள்ள ரெஸ்ட்ரூமில் தன்னைத்தானே வளைத்து வளைத்து வீடியோ எடுத்திருக்கிறார். தொப்புள் தெரிய ஸ்ட்ராப்லஸ் டாப் மற்றும் லாங் ஸ்கர்ட் அணிந்துள்ள சாக்ஷி பாத்ரூமுக்குள் உள்ள கண்ணாடியில் சுற்றி சுற்றி பார்த்து வீடியோ எடுத்திருக்கிறார்.
கக்கூஸை மறக்கல
அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள், பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகும் கக்கூஸை மறக்கல போல என்று கமென்ட் அடித்து வருகின்றனர்.

கக்கூஸ் கேங்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு சிலரை தவிர பெரும்பாலான பிரபலங்கள் எந்நேரமும் கக்கூஸில் உட்காந்து பேசுவது, காஃபி குடிப்பது, கடலை போடுவது கலாய்ப்பது என சகல வேலையையும் செய்தனர். இதனால் கக்கூஸ் கேங் என்ற பெயர் கூட வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











