இந்தியளவில் டிரெண்டான த்ரிஷ்யம் 2.. ரீமேக்குக்கு அந்த ஹீரோவும் ரெடி.. என வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்

திருவனந்தபுரம்: சஸ்பென்ஸ் திரில்லரான 'த்ரிஷ்யம்' 2 படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், பிரபல நடிகர் ஒருவர் அந்த படத்தை ரீமேக் செய்ய இந்நேரம் திட்டம் தீட்டியிருப்பார் என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன் லாலின் 60வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

சினிமா நடிகர்கள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிறந்தநாள் பரிசு

பிறந்தநாள் பரிசு

லாலேட்டன் என செல்லமாக அழைக்கப்படும் திறமை வாய்ந்த நடிகரான மோகன் லாலின் பிறந்தநாள் பரிசாக 'த்ரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்ற அறிவிப்பை இயக்குநர் ஜீத்து ஜோசப் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே சமூக வலைதளங்களில் #Drishyam2 என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

பக்கா த்ரில்லர்

பக்கா த்ரில்லர்

கடந்த 2013ம் ஆண்டு ஜூத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால், மீனா, அன்சிபா அஞ்சு, ஆஷா சரத், எஸ்தர் அனில், ரோஷன் பஷீர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் த்ரிஷ்யம். காமவெறி பிடித்த இளைஞன் ஒருவனால் தனது குடும்பத்துக்கு வந்த பிரச்சனையை சினிமா படங்களை பார்த்த மூளையைக் கொண்டு ஒரு சராசரி ஆள் எப்படி காப்பாற்றுகிறான் என்பதே படத்தின் கதை.

பல்வேறு மொழிகளில்

பல்வேறு மொழிகளில்

மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் தமிழில் உலகநாயகன் கமல் நடிப்பில் பாபநாசம் என்ற தலைப்பில் வெளியாகி இருந்தது. பாலிவுட்டில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா நடிப்பில் த்ரிஷ்யம் என்ற பெயரிலேயே அந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் த்ருஷ்யம் என ரீமேக் ஆனது.

கலாய்க்கும் நெட்டிசன்கள்

கலாய்க்கும் நெட்டிசன்கள்

த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்ற அறிவிப்பு வெளியானவுடன், மோகன் லால் ரசிகர்கள் உற்சாகமடைந்து அந்த ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர். அதில், சத்தமே இன்றி சில பாலிவுட் ரசிகர்கள் நடிகர் அஜய் தேவ்கன், அந்த படத்தை ரீமேக் செய்ய இந்நேரம் ரெடியாகி இருப்பார் என ட்ரோல் செய்து வருகின்றனர்.

அஜய் தேவ்கன் வெயிட்டிங்

அஜய் தேவ்கன் வெயிட்டிங்

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜய் தேவ்கன் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான த்ரிஷய்ம் இந்தி வெர்ஷனும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த படத்தை இயக்குநர் நிஷிகாந்த் கமாட் இயக்கி இருந்தார். இந்நிலையில் த்ரிஷ்யம் 2 படம் வெளியாகட்டும் உடனடியாக அதனை ரீமேக் செய்ய அஜய் தேவ்கன் வெயிட்டிங்கில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பாவம் அவரை வச்சு செய்து வருகின்றனர்.

வெயிட்டான ரோல்

வெயிட்டான ரோல்

கடந்த ஜனவரி மாதம் அஜய் தேவ்கன், சைஃப் அலி கான், கஜோல் நடிப்பில் வெளியான தானாஜி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அடுத்ததாக ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் வெயிட்டான ரோலில் அஜய் தேவ்கன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X