twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த வயசுலையும் இவ்ளோ முடியா.. வில்லனா நடிக்கலாம்.. சேரனின் நியூ லுக்கை பார்த்து மிரளும் ரசிகர்கள்!

    |

    சென்னை: இயக்குநரும் நடிகருமான சேரனின் நியூ லுக்கை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் இயக்குநர் சேரன்.

    படத்தை இயக்கி நடிக்கிறார் சித்த மருத்துவர் வீரபாபு.. படத்தோட பேரு என்ன தெரியுமா? படத்தை இயக்கி நடிக்கிறார் சித்த மருத்துவர் வீரபாபு.. படத்தோட பேரு என்ன தெரியுமா?

    நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் டெரர் லுக்கில் அவர் பதிவிட்டு இருக்கும் புதிய புகைப்படத்தை பார்த்த ஏராளமான ரசிகர்கள் தரமான வில்லனாக நடிக்கலாம் சார் நீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

    சேரனின் நியூ லுக்

    சேரனின் நியூ லுக்

    ஹாலிவுட் வில்லன் ரேஞ்சுக்கு மிரட்டலாக மாறி உள்ளார் இயக்குநரும் நடிகருமான சேரன். நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் இருக்கும் சேரனை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் பல விதமான கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

    தலைவருக்கு வில்லன்

    தலைவருக்கு வில்லன்

    சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தில் இவரையெல்லாம் வில்லனாக போட்டு விட்டால் தரமான சம்பவமாக இருக்கும். இவருக்கும் மிகப்பெரிய பிரேக் கிடைக்கும் அந்த அளவுக்கு சேரன் சாரிடம் நிறைய சரக்கு இருக்கிறது என ரஜினி ரசிகர்கள் சேரனை வில்லனாக்க முயற்சித்து வருகின்றனர்.

    எவ்ளோ முடி

    எவ்ளோ முடி

    இப்ப எல்லாம் ஏகப்பட்ட இளைஞர்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழுந்து விடும் நிலையில், இயக்குநர் சேரன் இந்த வயதிலும் இவ்வளவு முடியை வைத்திருப்பதை பார்த்து, இளைஞர்கள் நிச்சயம் பொறாமைப்படுவார்கள் என வடிவேலுவின் போட்டோ மீமை போட்டு கலகலப்பாக்கி உள்ளனர்.

    தாடி நல்லா இருக்கு

    தாடி நல்லா இருக்கு

    மேற்கத்திய அறிஞர் போல இருக்கீங்க சார் இந்த புகைப்படத்தில், பல பேருக்கு தாடி சரியா சூட் ஆகாது. ஆனால், உங்களுக்கு தாடி ரொம்பவே நல்லா இருக்கு என சேரனுக்கு பெண் ரசிகை ஒருவர் வர்ணித்து ஹார்ட்டீன்களையெல்லாம் போட்டுள்ளார்.

    கேங்ஸ்டர் படம்

    கேங்ஸ்டர் படம்

    ஒரு மெச்சூரான லவ் ஸ்டோரி அல்லது கேங்ஸ்டர் படத்துக்கு உங்க லுக் அப்படியே செட் ஆகும் சார். உங்க டைரக்‌ஷன்லயே ட்ரை பண்ணுங்க.. சேரன் சார் கேங்ஸ்டர் படத்தை எப்படி எடுப்பாருன்னு பார்க்க ஆசையா இருக்கு என இந்த ரசிகரும் ஒரு ரெக்வஸ்ட் வைத்துள்ளார்.

    மம்மூட்டின்னு நினைச்சேன்

    மம்மூட்டின்னு நினைச்சேன்

    பிராமிஸ்.. இதை பார்த்த உடனே மம்மூட்டின்னு நினைச்சேன் என டோட்டலாகவே சேரன் சார் மாறியிருப்பதை மெய் சிலிர்த்து போய் வர்ணித்துள்ளார் இந்த ரசிகர். மேலும், வரலாற்று படத்தில் நடிக்கிறீங்களா சேரன் சார் என கேட்டு வருகின்றனர். விரைவில் இந்த தோற்றத்திற்கான ரகசியத்தை சேரன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Director come actor Cheran’s new long hair and beard getup liked by several Tamil Cinema fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X