ரெட் அலர்ட் கொடுக்கும் திவ்யபாரதி.. செம ஹாட் மச்சி.. கண் சிமிட்டாமல் பார்க்கும் ரசிகர்கள்!
சென்னை: பேச்சுலர் படத்தின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பரவியவர் தான் நடிகை திவ்யபாரதி.
ஜி வி பிரகாஷுக்கு ஜோடியாக பேச்சுலர் படத்தில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
சதீஷ் செல்வகுமார் எழுதி இயக்கிய பேச்சிலர் படம் இவர் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

முதல் படமே வெற்றி
பல படங்கள் நடித்தும் நிலையான வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கும் பல நடிகைகளுக்கு மத்தியில், ஒரே படத்தில் சிக்சர் அடித்து புகழின் உச்சிக்கு சென்றவர் தான் நடிகை திவ்யபாரதி. ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக பேச்சிலர் படத்தில் இவர் நடித்து புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார். நெருக்கமான காட்சிகளிலும், சென்டிமென்ட் காட்சிகளிலும் பல படங்கள் நடித்து அனுபவமான நடிகை போல் தனது முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இளைஞர்களின் மனதில் கனவுக் கன்னியாக மாறியுள்ளார்.

எப்பவும் பிஸி
எப்பொழுதும் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வரும் நடிகை திவ்ய பாரதி, ஒவ்வொரு புகைப்படத்திலும் தனி ரகம் தான். புடவையில் பார்ப்பதற்கு மிகவும் ஹோம்லியாகவும், அதேசமயம் மாடர்ன் உடைகளில் கவர்ச்சியாகவும் இருந்து முன்னணி நடிகைகளில் லிஸ்டில் சேர்ந்து விட்டார் நடிகை திவ்யபாரதி. சமீபத்தில் கடற்கரை அருகே ஜீன்ஸ் பேண்ட் போட்டு கவர்ச்சியாக இவர் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

வைரல் புகைப்படங்கள்
இதை தொடர்ந்து சிகப்பு நிற உடையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் செம ஹாட்டாக ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்துள்ளது.
அதிலும், இவர் கொடுத்துள்ள விதவித போஸ்கள், ரசிகர்களை ஈர்த்ததுடன் கமெண்ட்களையும், லைக்குகளையும், ஹாட் இமோஜிகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
Recommended Video

கமெண்ட் செக்ஷன்
அதிலும் சில ரசிகர்களின் கமெண்ட்டுகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. அதில் ஒருவர் எல்லா உயிரையும் கொன்னுட்டு இருக்க, இது எங்க போய் முடியப் போகுதோ தெரியல என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மற்றொருவர் அடப்பாவிங்களா எங்கடா இருக்கீங்க, அதுக்குள்ள கமெண்ட் செக்சன் ஃபுல் ஆயிடுச்சு என்று சிரித்தபடி கமெண்ட் போட்டுள்ளார். ரசிகர்கள் தொடர்ந்து கொடுக்கும் ஆதரவை பார்த்தால் கண்டிப்பாக திவ்யா பாரதி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











