உங்க இடத்தை நீங்கதான் கேட்டு வாங்கணும். ஏன்னா மத்தவங்க காலி பண்ண தான் பார்ப்பாங்க.. ஆரிக்கு ஆதரவு!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அன்சீன் புரமோவை பார்த்த ரசிகர்கள் ஆரிக்கு ஆதரவாக டிவிட்டி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அன்சீன் புரமோவில், டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின் போது நடந்த ஆர்க்யூமென்ட் இடம்பெற்றது.
இதில் சோம் அடிக்கடி கையை இறக்கினார் என ரம்யாவும் கூறுகிறார். மூன்றாவது புரமோவை பார்த்துவிட்டு ஆரிக்கு எதிராக சமூ க வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டன.

காலி பண்ண பிளான்
இந்நிலையில் அன்சீன் புரமோவை பார்த்த நெட்டிசன்கள், ஆரி மட்டும் இல்லை ரியோவும் ரம்யாவுமே அதைத்தான் சொல்கிறார்கள் என ஆரிக்கு ஆதரவாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் மொத்த வீடும் ஆரியை காலி பண்ண பிளான் பண்ணும் நிலையில் ஆரிக்கான இடத்தை அவர்தான் கேட்டு வாங்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

பிக்பாசும் கேட்க மாட்டார்
அன்சீன் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அடேய்.. எந்த போட்டிக்கும் நடுவரும் இல்ல.. பிக்பாசும் கேக்க மாட்டாரு பாக்குற ஆடியன்சும் கேக்க முடியாது.. அப்ப கூட விளையாடுற ஆரி தான சொல்ல முடியும்? அவரு சொன்னா அப்படி இல்லனு சோம் தான் நிரூபிக்கனும்.. மத்த எல்லாரும் ஃபேவரிட்டிஸம் பண்ணி தப்ப மறைத்து சுட்டி காட்ட மாட்டிங்க என கேட்டுள்ளார்.

கஞ்சா கருப்பு மாதிரி
எபிசோட் ரூல்ஸ்லாம் பார்த்துட்டு வந்து கதை எழுதுங்கப்பா!
ரம்யாவும் சொல்றாங்க.. 'எல்லாம் இந்த ஆரி பய தான் காரணம்னு' கஞ்சா கருப்பு மாதிரி கமெண்ட் செக்ஷன் முழுக்க புலம்பல் தாங்கல.. போர் அடிக்கிது இதே கமெண்ட்ஸ் பாத்து பாத்து.. என சலித்து போயுள்ளார் இந்த நெட்டிசன்.

எபிசோட் பார்க்கலாம்..
அன்சீன் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ரம்யா மற்றும் ரியோவும் சோம் கை இறங்குச்சுன்னு சொல்றாங்க.. ஓகே எபிசோட் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

பார்த்து தெரிஞ்சுக்கலாம்..
ரம்யாவும் அதைதான் சொல்றா.. ஆக ஆரி சொல்றது சரிதான்.. ஆனால் உண்மையிலேயே சோம் சொல்ற மாதிரி திருப்பி திருப்பி சொன்னாரான்னு எபிசோட் பார்த்துதான் தெரிஞ்சிக்கணும் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

காலி பண்ணதான் பார்ப்பாங்க
அன்சீன் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி புரோ உங்களுக்கு உள்ள இடத்தை நீங்கதான் கேட்டு வாங்கணும். ஏன்னா உங்களை காலி பண்ண தான் பார்ப்பாங்க.. நீங்க பேசாட்டி உங்க தலையில மசாலா அறைச்சுருவாங்க.. என்று பதிவிட்டுள்ளார்.

அவருக்காக யார் பேசுவார்?
அன்சீன் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தனக்காக ஆரி, தானே ஆர்கிவ் பண்ணனும், அவருக்காக வேறு யார் தான் பேசப்போறது? ஆரி தோல்வியடையனும்னு நினைக்கிறவங்க மத்தியில.. என பிக்பாஸ் வீட்டின் சூழலை குறிப்பிட்டு டிவிட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











