தைரியமா இருங்க புரோ.. தலைவர் பார்க்காத எதிர்ப்புகளா? நடிகர் லாரன்ஸ்க்கு குவியும் சப்போர்ட்!
சென்னை: தனது பெற்றோரையும் தவறாக பேசுவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் வேதனை தெரிவித்த நிலையில் அவருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அண்மையில் நடைபெற்ற தர்பார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பெயர் குறிப்பிடாமல் சாடினார்.
அவரது பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து லாரன்ஸ் குறித்தும் சமூக வலைதளங்களில் தவறாக பேசி வந்தனர். இந்நிலையில் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது தாய் தந்தை குறித்தும் தவறாக பேசுவதாக வேதனையுடன் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார் லாரன்ஸ்.

நெட்டிசன்கள் ஆதரவு
அவர் அந்த பதிவை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் லாரன்ஸ்க்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நாங்க இருக்கோம்..
அண்ணா கவலைப்படாதீங்க.. உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க அண்ணா.. உங்களுக்க நாங்க இருக்கோம் அண்ணா.. என்று கூறியிருக்கிறார் இவர்.
தர்மமே வெல்லும்
அண்ணா நீங்க ஏதும் தப்பாக பேசவில்லை.. உங்களை தவறாக பேசுபவரை அந்த ஆண்டவன் பார்த்துக்குவான்.
கடைசியில் தர்மமே வெல்லும்.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
உங்க பக்கம்தான்
புரோ.. அப்போ தலைவர் எல்லாம் நெனைச்சு பாருங்க.. எவ்ளோ வன்மங்களா சந்திச்சுருப்பாரு.. நீங்களும் அவரு வழிய ஃபாலோ பண்ணுங்க.. எதிரிகள் அதிகமான நீங்க வளர்ந்து வர்றீங்கன்னு அர்த்தம்.. நாங்களும் கடவுளும் உங்க பக்கம்தான் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
ஃபாலோ தலைவர் வார்த்தைகள்
விடு கண்ணா ஆண்டவன் பார்த்துப்பான்.. ஃபாலோ தலைவர் வார்த்தைகள் என்று கூறுகிறார் இவர்.
ஆண்டவன் இருக்கான்
உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்கன்னு கவலைப்படாதீங்க அண்ணே ஆண்டவன் இருக்கான் தலைவர் ரசிகர் நாங்க இருக்கோம் என்கிறார் இந்த ரசிகர்.
பார்க்காத எதிர்ப்புகளா?
தைரியமா இருங்க புரோ.. தலைவர் பார்க்காத எதிர்ப்புகளா? எங்கள் சப்போர்ட் எப்போவும் உங்களுக்குதான் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
இணைவோம் மனிதனாய்
வரவேற்கிறேன் அண்ணா.. முதலில் தோன்றியது மனிதம் தான்.. மனிதனால் தோன்றியதே சாதி,மதம்,இனம்,மொழி என்று,வாருங்கள் நாம் இணைவோம் மனிதனாய் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











