தாமரை கிட்ட மோதுவதும் ஹைவோல்டேஜ்ல கை வைக்கிறதும் ஒண்ணு.. அபிநய் தான் இந்த வாரம் அவுட்டா?
சென்னை: பாவனி மற்றும் பிரியங்காவிடம் பம்மும் அபிநய் தாமரையிடம் மட்டும் ஏன் சண்டை போடுகிறார் என்கிற கேள்வியை தாமரை செல்வி ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
அதே சமயம் இமான் அண்ணாச்சியிடம் அமைதியாக பேசிய தாமரை செல்வி அபிநயிடம் சண்டை போடுவது ஏன் என்கிற கேள்வியை பிரியங்கா குரூப் கேட்டு வருகிறது.
இந்த சீசனிலும் பிக் பாஸ் வீடு இரண்டு பெரிய குழுக்களாக செயல்பட்டு வருவதை கமல் எப்போ தான் கண்டுபிடிக்கப் போகிறாரோ என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

மிக்சருக்கு கோபம்
நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய் பிக் பாஸ் வீட்டில் 66 நாட்களை எப்படி கடந்தார் என்கிற ஆச்சர்யத்தில் ரசிகர்கள் இருந்து வரும் நிலையில், இன்றைய இரண்டாவது புரமோவில் தாமரையுடன் அவர் சண்டை போடுவதை பார்த்த ரசிகர்கள்.. "பாருடா மிக்சருக்கு கோபம் வந்து விட்டது" என கலாய்த்து வருகின்றனர்.

டபுள் ஸ்ட்ராண்டட்
இமான் அண்ணாச்சினா ஒரு மாதிரி பேசுறா தாமரை.. அபிநய்னா வேற மாதிரி கத்துறா தாமரை.. டபுள் ஸ்ட்ராண்டட் தாமரை நீ இந்த வாரம் வெளியே போற.. போக வைக்கிறோம் என பிரியங்கா ஆர்மியினர் சவால் விட்டு வருகின்றனர்.

பட்டையை போட்டுட வேண்டியதுதான்
இந்த சீசனில் வெள்ளிக் கிழமை ராமசாமியாக தாமரை தான் இருந்து வருகிறார் என்பது தெரிந்த விஷயம் என்றும் இந்த வீக்கெண்டும் பட்டையை போட்டு கமல் சார் முன்னாடி நல்ல பொண்ணாக மாறி ஏமாற்றி விட வேண்டியது தான் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அண்ணாச்சி பொறுமையா தான் பேசினாரு
அபிநய் மாதிரி நேத்து இமான் அண்ணாச்சி கத்தவில்லை என்றும் அவர் பொறுமையா தான் இந்த பிரச்சனையை டீல் பண்ணினார் என்றும், நேற்றே அமீரிடம் அபிநய்க்கு தாமரை என்றாலே பிடிக்கவில்லை என அபிநய் பற்றி ராஜு சொன்னது சரியாக போய் விட்டது. என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

ஹைவோல்டேஜ்
தாமரை செல்வி கிட்ட மோதுவதும் ஹைவோல்டேஜ்ல கை வைப்பதும் ஒண்ணு என தாமரை செல்வி ஆர்மியினர் அபிநயை எச்சரித்து வருகின்றனர். வழக்கமாக மற்றும் அபிநய் என சொல்லி வந்த பிக் பாஸே இந்த வாரம் முதல் நபராக அபிநய் பெயரை அழைக்க காரணமே இந்த வாரம் அபிநய் தான் அவுட் ஆகப் போகிறார் என்பதற்கு கொடுத்த சிக்னல் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











