விடுங்க சார்.. பெத்த மகளே பேச்சை கேட்காத காலம்.. இவங்கல்லாம் ஒரு ஆளுன்னு.. விளக்கம் கொடுக்றீங்க!

Recommended Video

Cheran Tweet:இனி கவின் - லாஸ்லியா பேரே என் நாக்கில் வராது

சென்னை: கவின் மற்றும் லாஸ்லியாவின் பெயரை இனி தன் நாக்கு உச்சரிக்காது என்று சேரன் டிவிட்டியிருந்த நிலையில், சேரனுக்கு ஆதரவாக பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் இயக்குநர் சேரன். சகபோட்டியாளரான லாஸ்லியா, சேரனை தனது அப்பாவின் சாயலில் இருப்பதாக கூறி சேரப்பா என்று அழைத்து நெருக்கம் காட்டினார். இதனால் சேரனும் மகள் போல் பாவித்தார்.

ஆனால் கவினுடன் காதல் கொண்ட லாஸ்லியா அவரின் பேச்சை கேட்டு சேரனின் பாசத்தை சந்தேகப்பட்டதோடு, அவரை அவமதிக்கும் வகையிலும் கமல்ஹாசன் முன்பு பேசினார். அப்போது கமலே சிறுபிள்ளைத்தனமாக சேரன் மீது குறை சொல்லக் கூடாது என கண்டித்தார்.

அநாகரிகமாக

அநாகரிகமாக

காதல் குறித்து வெளியே போய் பேசிக்கொள்ளலாம் என்று கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் அட்வைஸ் செய்தார் சேரன். ஒருபோதும் கவினை காதலிக்கக்கூடாது என லாஸ்லியாவிடம் கூறியதாக தெரியவில்லை.ஆனால் கவின் சேரனை தவறாக புரிந்துகொண்டு லாஸ்லியாவிடமும் அவர் குறித்து தவறாக பேசினார். மேலும் கவின் மற்றும் லாஸ்லியா ரசிகர்களும் சேரனை சமூக வலைதளங்களில் அநாகரிகமாக பேசி வருகின்றனர்.

பேச்சுக்கு வரவேண்டாம்

பேச்சுக்கு வரவேண்டாம்

இந்நிலையில் இனி தனது நாக்கு கவின் மற்றும் லாஸ்லியா பெயரை உச்சரிக்காது, அவர்களின் ரசிகர்கள் தனது பேச்சுக்கு வரவேண்டாம் என காட்டமாக டிவிட்டியிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவர்கள் எல்லாம் ஒரு ஆள் என்று விளக்கம் கொடுக்கிறீர்களா என கேட்டு டிவிட்டரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இவர்களே மறந்து விடுவார்கள்

இவர்களுக்கு பதில் சொல்லி உங்க நேரத்தை ஏன் வீண் செய்கிறீர்கள், இன்னும் இரண்டு வருடத்தில் கவின், லாஸ்லியா என்ற இரண்டு பெயர்களையும் இவர்களே மறந்து விடுவார்கள்... உங்களின் அடுத்த படைப்பை காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம், நீங்கள் அதில் கவனம் செலுத்துங்கள்.. என்று கூறியுள்ளார் இவர்.

புரிந்து கொள்வார்கள்

ப்ளீஸ் விடுங்க சேரன் சார்.. நீங்க யாருக்கும் விளக்கம் கொடுக்க தேவையில்லை.. நேர்மையான மக்கள் புரிந்துகொள்வார்கள்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

சந்தோஷப்படுத்துங்க சார்

உண்மையான பாசத்துக்கும் அக்கறைக்கும் மதிப்பில்லை ஸார்!! இதையெல்லாம் விட்டு எங்களை போன்ற கோடிகணக்கான ரசிகர்களை உங்கள் படைப்புகளால் சந்தோஷப்படுத்துங்க சேரன்!! என்று கூறுகிறார் இவர்.

உங்கள் தரத்திற்கு அழகு

அவர்களுடைய பெயரை உச்சரிக்காமல் இருப்பதே உங்கள் தரத்திற்கு அழகாக அமையும். உங்களுடன் ஒப்பிட அவர்கள் வொர்த் இல்லாதவர்கள் என்று கூறியிருக்கிறார் இவர்.

அன்புக்கு தகுதியற்றவள்

உங்கள் அன்பை பெற அவள் தகுதியற்றவள் என்று தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

துணை நிற்பார்கள்

தரம் குறைந்த விமர்சனத்திற்கு உங்கள் தரத்தை குறைத்து கொண்டு பதில் சொல்ல வேண்டாம்.. உங்களை புரிந்தவர்கள் எப்பொழுதும் உங்களுக்கு துணை நிற்பார்கள் என்கிறார் இவர்.

நடித்தார் என்பதே உண்மை

இயக்குநரே பெத்த மகளே பேச்சை கேட்காத காலம் யாரோ பெத்த பொண்ணு அதுவும் உங்கள் சாயலில் அவர் தந்தை இருக்கிறார் என்ற காரணத்திற்க்காக பாசம் காமித்தாரா இல்லை லாஸ்லியா நடித்தார் என்பதே உண்மை.அதை நீங்கள் உணர இவ்வளவு காலமாயிற்று என்று கூறுகிறார் இவர்.

இவனுங்க ஒரு ஆளு

விடுங்க சார் இவனுங்க ஒரு ஆளுனு நீங்க பதில் சொல்றீங்க.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

நீங்கதான் கெத்து

சார் இவனுங்களாம் ஒரு ஆளுன்னு நீங்க விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. எல்லாம் சின்ன பசங்க சார்.. மெட்சூரிட்டி உள்ள எல்லாரும் உங்களுக்கு தான் சப்போர்ட் பண்றோம்.. நீங்கதான் சார் எப்போவும் கெத்து என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X