கண்டபடி கத்திய ஷெரின்.. கூலாக ஹேன்டில் செய்து வெறுப்பேற்றிய மதுமிதா.. அள்ளும் ஃபேன்ஸ் சப்போர்ட்!
சென்னை: ஷெரின் கண்டபடி கத்திய போது அந்த சூழ்நிலையயை மதுமிதா ஹேன்டில் செய்த விதம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடு மரண கொடூரமாக இருந்தது. தமிழ்பெண் என்று கூறிய ஒரே காரணத்திற்காக மதுமிதாவை ஷெரின், அபிராமி, சாக்ஷி, ரேஷ்மா, வனிதா ஆகியோர் கட்டம் கட்டி வருகின்றனர்.
நேற்றைய எபிசோடில் ஷெரின், மதுமிதாவை மிக கடினமான சொற்களால் திட்டி தீர்த்தார். எப்படி நடந்துகொள்ள வேண்டும் என உன் வீட்டில் கற்றுக்கொடுக்கவில்லையா? நீ ஒரு யூஸ்லஸ் என்றும் படுகேவலமாக திட்டினார்.

ஷெரினை வெறுப்பேற்றிய மது
ஆனால் அவற்றை மிக பொறுமையாக, கூலாக ஹேன்டில் செய்தார் மதுமிதா. வீட்டில் கற்றுக்கொடுக்கவில்லை, நீ கற்றுக்கொடு, நீ யூஸ்ஃபுல்லாக இருக்கிறாய் என்று கூறியே ஷெரினை வெறுப்பேற்றினார் மதுமிதா.

எரிச்சலான ஷெரின்
மதுமிதா அந்த பிரச்சனையை கையாண்ட விதம் செம.. மதுமிதாவின் சாஃப்ட்டான நச் ரிப்ளைகளால் இன்னும் எரிச்சல் அடைந்தார் ஷெரின். மதுமிதாவின் அந்த நடவடிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
இதான் தமிழ் பொண்ணு
அத்தனை பேரு ஒரு பொண்ணுகிட்ட சண்டை போடும் போதும் தன்னோட தைரியத்தை விடாம தனியா நின்னு போராடுறா பாரு அந்த கெத்துக்குப் பேர் தான் தமிழ் பொண்ணு...
வேற லெவல் ஹேன்ட்லிங்
மதுமிதா வெர்சஸ் 4 சைக்கோகள்... அப்பா.. வேற லெவல் ஹேன்ட்லிங்.. இம்ப்ரஸ்டு.. ஷெரின் எப்போதும் மனநிலை பாதிக்கப்பட்டவர் போலவே பேசுகிறார்.. யூஸ்லஸ், போயா.. என்று. இவ்வாறு கூறுகிறார் இந்த நெட்டிசன்.
பாராட்ட வேண்டும்
4 பன்றிகள் பாய்ந்தும் கூட மதுமிதாவும் மீராவும் அவர்களுக்கு முன்பு தைரியமாக நின்றார்கள்.. அதை நிச்சயம் நாம் பாராட்ட வேண்டும்.. என்கிறார் இவர்.
தைரியமாக இருங்கள் மது
நான் மதுமிதாவை ரொம்பவும் நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்.. எப்போதும் தைரியமாக இருங்கள் மது.. என்கிறார் இவர்..
திடமாய் இரு பெண்ணே
மதுமிதா ஏற்கனவே மனசு நொந்துபோயிருக்காங்க.. குடும்பத்தை பார்க்க வேண்டும் என விரும்புகிறார். பரிதாபமா இருக்கு.. இந்த 4 பேரும் எவ்ளோதான் கத்தி பேசினாலும் முடியல.. திடமாய் இரு பெண்ணே.. சும்மா தூக்கி போட்டுட்டு போய்க்கிட்டே இரும்மா.. என்கிறார் இவர்.
இன்னைக்கு செம கெத்து
ஜாங்கிரி மதுமிதா இன்னைக்கு செம கெத்து என்கிறார் இந்த நெட்டிசன்.
நேர்மையாகதான் இருக்கிறார்கள்
மீராவும் மதுமிதாவும் உண்மையிலேயே நேர்மையாகதான் இருக்கிறார்கள்.. என்கிறார் இவர்.
பெரிய தவறு
ஷெரின் எல்லைத்தாண்டி போகிறார்.. மதுமிதாவை யூஸ்லஸ் என்று சொல்ல அவருக்கு எந்த உரிமையும் இல்லை.. ஷெரின் பெரிய தவறு செய்து விட்டார் என்கிறார் இவர்.
மதுவுக்கு ஆறுதல் கூறவில்லை
லாஸ்லியாவுக்கு ஆறுதல் கூறியது போல் ஏன் யாரும் மதுமிதாவுக்கு ஆறுதல் கூறவில்லை என்கிறார் இவர்.


Click it and Unblock the Notifications











