மதுமிதா சொன்னது டோட்டலி ரைட்.. சமூக வலைதளங்களில் பெருகும் ஆதரவு!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா நேற்று கூறிய விஷயத்தில் தமிழ்பொண்ணு என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் பிடித்துக்கொண்டு ஒட்டு மொத்த பிக்பாஸ் குடும்பத்தினரும் சண்டையிட்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமி, கவினுடன் காதல், முகெனுக்கும் எனக்கும் பிறந்த குழந்தை என தண்ணீர் பாட்டிலை கூறியது போன்ற விஷயங்கள் குடும்பத்துடன் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு நெருடலை ஏற்படுத்தியது.
இதனைதான் மதுமிதாவும் கூறினார். அதுவும் அபிராமியின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் அபிராமியின் பெயரை காப்பாற்றும் நோக்கத்திலேயே பேசினார் மதுமிதா.

அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை
அப்போது தமிழ் பெண் என்று அவர் கூறிய வார்த்தையை ஒட்டு மொத்த குடும்பத்தினரும் பெரிதுபடுத்திவிட்டனர். அதுவும் தன்னை தமிழ் பெண் என்றும் காட்டிக்கொள்ளும் நோக்கத்தில் மதுமிதா அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை.

ஓட்டுக்காக என நினைத்து
ஆனால் அந்த ஒரு வார்த்தையை அரைகுறையாக கேட்ட ஷெரின் அதனை ஊதி பெரிதாக்கிவிட்டார். நீ வெளியே போ என்றும் ஷெரின் மதுமிதாவை கூறினார். மதுமிதா பேசியதை புரிந்துகொள்ளாமலே வனிதா, சாக்ஷி, அபிராமி, கவின் என அனைவரும் சேர்ந்துக்கொண்டு மதுமிதா ஓட்டுக்காக அப்படி பேசுகிறார் என நினைத்து சண்டை போட்டனர்.

மதுமிதா பேசியது சரிதான்
இந்த சண்டையால் பிக்பாஸ் வீடு அல்லோகளப்பட்டது. இந்நிலையில் மதுமிதா பேசியது சரிதான் என நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்க மாட்டார்கள்
மதுமிதா சொன்னது முழுவதும் சரி.. நோய்வாய் பட்டவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்கிறார் இந்த நெட்டிசன்.
அந்த ஒரு வார்த்தை
மதுமிதா சொல்ல வந்ததை புரிஞ்சிக்குங்க.. அபி அப்படி நடந்துகிட்டா கண்டிப்பா இங்க சோஷியல் மீடியால அபியை அசிங்கமாதான் பேசியிருப்பாங்க.. அது வேணாம்ன்னு சொல்ல வந்ததை அனைவருத் சேர்ந்து தமிழ்ங்கற ஒரு வார்த்தைல கொண்டு போய் நிக்றீங்களே.. என்கிறார் இந்த நெட்டிசன்.
என் ஓட்டு மதுவுக்குதான்
நான் மதுமிதாவை காப்பாற்றுவேன். என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
நோக்கம் சரியானது
மது நேற்று சொன்னது தப்பே இல்ல.. நிறைய பெற்றோர் அபி மற்றும் அவரது கேங்க் செய்வதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. குடும்பத்தோடு பார்க்கும் போது நமக்கே ஒரு மாதிரியாதான் இருக்கும்.. மது சொன்ன விதம்தான் தவறானது.. ஆனால் அவரது நோக்கம் சரியானதுதான். என்கிறார் இவர்.
கண்ணியமா நடந்துப்பாங்க
பொண்ணுக்கும்,தமிழ் பொண்ணுக்கும் என்ன வித்தியாசம்? - ஷெரீன்
கண்ணியமா பேசுறவுங்க கண்ணியமா டிரஸ் பண்றவுங்க தான் தமிழ் பொண்ணுங்க.
மதுமிதா சொன்னது சரிதான்.எந்த தமிழ் பொண்ணும் விளையாட்டா கூட அபி பேசுன மாதிரி பேச முடியாது.பேச மாட்டாங்க. என்கிறார் இந்த நெட்டிசன்.
போலியாக நடிக்கவில்லை
மதுமிதா நல்ல பெண்.. அவர் போலியாக நடிக்கவில்லை, அவர் உண்மையாகதான் இருக்கிறார்.. நான் மதமிதாவுக்கு சப்போர்ட் செய்கிறேன்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்
அதற்காக சொல்லவில்லை
மதுமிதாவை நினைக்கும் போது கஷ்டமாக உள்ளது. தமிழ் பெண் என்பதை அடையாளத்திற்காக சொல்லவில்லை. # அபிராமியின் முதிர்ச்சியற்ற நடத்தையிலிருந்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பார்வையாளர்களைப் பாதுகாப்பதற்கும் மதுமிதா முயற்சித்தார். மேலும் 99% பிபி 3 பார்வையாளர்கள் தமிழ் பார்வையாளர்களாக இருப்பதால் மதுமிதா செய்தது சரிதான். என்கிறார் இந்த நெட்டிசன்.
100 சதவீதம் சரி
அவர் கூறியது 100 சதவீதம் சரி.. நான் தமிழ் பொண்ணுக்குதான் சப்போர்ட் செய்வேன்... என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











