அவரையும் இப்படி மன்னிப்பு கேட்க வச்சுருக்கலாம்ல.. அது இன்னும் அடங்கல!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Worst Meera : போகும் போது கூட Attitude காட்டிய Meera- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சரவணன் பெண்களை உரசியதை பெருமையாக கூறிய நிலையில் நேற்று மன்னிப்பு கோரினார்.

தான் இளவயதாக இருக்கும் போது பேருந்தில் பல பெண்களை இடித்திருக்கிறேன் என நடிகர் சரவணன், கமல்ஹாசனிடம் கூறினார். இதனைக்கேட்ட பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

ஆனால் இதற்கு பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்ததையடுத்து நேற்று விஜய் டிவி சரவணனை மன்னிப்பு கேட்குமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சரவணன்.அவர் மன்னிப்பு கேட்டது குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். அவற்றில் சில,

என்ன சொல்ல வந்தாரு

சரவணன் கன்பெஷன் ரூமுல என்ன சொன்னாரு, என்ன சொல்ல வந்தாரு, திருப்பி திருப்பி என்னமோ சொல்ல ஆரம்பித்தார். சரி மன்னிப்பு கேட்டாச்சு.. என்று கூறியிருக்கிறார் இவர்.

ஜெயில்ல போட்டுடுவாங்க போல

சரவணன் அப்போ பஸ்ல பொண்ணுங்கள இடிக்கிறதுக்காக போனன்னு சொன்னதுக்கு இப்போ பிடிச்சு ஜெயில்ல போட்டுடுவாங்க போல என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்.

அவரையும் இப்படி பேச வச்சுருக்கலாம்ல

சரவணனை மன்னிப்பு கேட்க வைச்சிட்டாங்க.. மீரா மிதுனையும் இப்படி கூப்பிட்டு வைத்து பேசியிருக்கலாம்ல.. என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

நிறுத்துங்கள்

மக்களிடம் சரவணனை மன்னிப்பு கேட்க வைத்து விட்டார் பிக்பாஸ், நல்ல நகர்வு.. இதற்காக கமல்ஹாசனை குற்றம்சாட்டுவதை பண்றதை நிறுத்துங்கள் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

அடி கொஞ்சம் பலமோ

மற்ற மாநில நியூஸ் சேனல்கள் கிழிச்சு தொங்கவிட்டதால் இப்போது பிக்பாஸ் நேரடியா சரவணனை மன்னிப்பு கேட்க சொல்லிட்டாங்களா.. அடி கொஞ்சம் பலமோ என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

நீங்கள் செய்யக்கூடாது

விக்கென்ட் எபிசோடில் பஸ் மற்றும் பெண்கள் பிரச்சனை குறித்து பேசியதற்கு மன்னிப்பு கெட்டார் சரவணன். நான் செய்த தவறை நீங்கள் செய்யக்கூடாது என்பதற்காகதான் அதை சொன்னேன்.. அவ்ளோதான் என்கிறார் இந்த நெட்டிசன்.

தானாக செய்திருக்கனும்

பேருந்தில் பெண்களை இடித்தேன் என சரவணன் சொன்னமைக்கு மன்னிப்பு கேட்க சொல்லிவிட்டது விஜய் டிவி. ஆனால் இதை அடுத்தவர் சொல்லி செய்யாமல், தானாக முன்வந்து விஜய் டிவி செய்திருக்க வேண்டும் என்று கூறுகிறார் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X