»   »  கோலிவுட்டை மட்டுமல்ல ஹாலிவுட்டையும் கலாய்ப்போம்- வாட்ஸ் அப்பில் கும்மியடிக்கும் இளசுகள்

கோலிவுட்டை மட்டுமல்ல ஹாலிவுட்டையும் கலாய்ப்போம்- வாட்ஸ் அப்பில் கும்மியடிக்கும் இளசுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: சமூக வலை தளங்களில் இதுவரை இந்திய சினிமாக்களை மட்டுமே கலாய்த்து வந்த இளசுகள் சமயம் கிடைக்கும்போதெலலாம் ஹாலிவுட் படங்களையும் சகட்டு மேனிக்கு வறுத்து வருகின்றனர்

பேஸ்புக்கில் மட்டும் அல்லாது வாட்ஸ்அப், ட்விட்டர் என எது கிடைத்தாலும் தங்கள் மீம்ஸ்களை அரங்கேற்றி தங்கள் கலைத் திறமையை காட்டிவருகின்றனர்

சமூக வலை தளங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது அரசு அவசர தடை சட்டம் பிறப்பித்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தை மக்கள் அணுக இந்த சட்டம் நீக்கப்பட்டது. இது நெட்டிசன்களுக்கு புது உற்சாகத்தை அளிக்க மேலும் மேலும் புதுப்புது அட்டகாசங்களை நாள்தோறும் அரங்கேற்றி வருகின்றனர்

போலிஸ் போலிஸ்

போலிஸ் போலிஸ்

எப்பவுமே FBI/CBI வேலை பாக்குற எல்லாருமே அண்டர்கவர் போலீஸாக இருப்பார்கள். மக்கள் தொகையில பெரும்பாலான ஆட்கள் போலீஸாக வேலை செய்வார்கள். எப்பேற்பட்ட ஆபத்தாயினும் போலீஸ் குடும்பம் மட்டும் அழகாக சிரித்தப்படி கடைசியில் நிற்பார்கள்.

இரண்டே விளையாட்டு தான்

இரண்டே விளையாட்டு தான்

அமெரிக்க படங்களில் காட்டும் பள்ளிகள் யாவும் கால்பந்து, அல்லது பேஸ்பால் இரு விளையாட்டுகளை மட்டுமே பிரபலப்படுத்துவார்கள்.
சிறப்பு ஸ்பான்சர்ஷிப் வாங்கிடுவார்கள் போல.

ஒரே சாய்ஸ் அமெரிக்கா தான்

ஒரே சாய்ஸ் அமெரிக்கா தான்

வேற்று கிரகவாசிகள் பூமியை தாக்க நினைத்தாலே அவர்கள் இறங்கும் இடம் அமெரிக்கா மட்டும் தான். ஏலியன்ஸ் அட்டாக் அமெரிக்கர்கள் மீது மட்டுமே. அமெரிக்காவில் மட்டுமே ஓநாய்கள், வித்யாசமான ஜந்துக்கள், மற்றும் ரத்தக் கட்டேரிகள் வரும். மற்ற நாடுகளுக்கு அந்த கொடுப்பனை கிடையாது.

மக்களுக்காக உயிரையே கொடுப்பேன்

மக்களுக்காக உயிரையே கொடுப்பேன்

இயற்கை சீற்றம் என்றாலே முதலில் தாக்கப்படுவது வெள்ளை மாளிகையும் அதிபரும் தான். அமெரிக்க அதிபர் மட்டுமே நடு ரோட்டில் கூட இறங்கி மக்களுக்காக குரல் கொடுப்பார். தேவைப்பட்டால் துப்பாக்கி சகிதமாக அதிபரே ஆபரேஷனிலும் இறங்குவார்.

பாவம்பா இந்த நடிகர்கள்

பாவம்பா இந்த நடிகர்கள்

கண்டிப்பாக அமெரிக்க படமெனில் ஒரு ஆப்பிரிக்கா நாட்டு கருப்பு நடிகர் பரிதாபமாக உயிர் விடுவார். அதிலும் ஹீரோக்களுக்காக மட்டுமே அவர்களின் உயிர் போகும்.

இவ்வளவுதான் அமெரிக்க படங்கள்

இவ்வளவுதான் அமெரிக்க படங்கள்

ம்... இவ்வளவுதான் அமெரிக்க படங்கள் என வாட்ஸப்பில் ஹாலிவுட் படங்களையும் ஒரு காட்டு காட்டி மெஸேஜ்களை ஷேர் செய்துள்ளனர் நம்மூர் இளசுகள்.

English summary
Netizens are being created Memes for the hollywood movies.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil