எக்கா.. தயவு செஞ்சு இந்த போட்டோவ நீயே ஒரு தடவை நல்லா பாரு.. நல்லாவா இருக்கு?
Recommended Video
சென்னை: லாஸ்லியா தனது கஸினுடன் சேர்ந்து எடுத்து வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஆட்டம் பாட்டம் என என்றிருந்த லாஸ்லியா, மக்களின் மதிப்பை பெற்றார்.
எப்போது கவினை காதலிக்க தொடங்கினாரோ, அப்போது குடும்பத்துடன் பிக்பாஸ் பார்ப்பவர்களின் ஆதரவை இழந்தார். கவின் - லாஸ்லியா காதலுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பெரும்பாலான ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் மருமகளே
இதனால் சமூக வலைதளங்களில் அவர் எப்போது போஸ்ட் போடுவார் என காத்திருக்கின்றனர் ரசிகர்கள். அண்மையில் சென்னை வந்திருப்பதாக அவர் டிவிட்டியதும், தமிழ்நாட்டின் மருமகளே வருக வருக என வரவேற்றனர் ரசிகர்கள்.
கஸினுடன் போட்டோ
தொடர்ந்து கோலிவுட் உங்களுக்காக காத்திருக்கிறது என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்தியளவில் ட்ரென்ட் செய்தனர். இந்நிலையில் லாஸ்லியா, தனது கசின் ஒருவருடன் இருக்கும் போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.

நல்லாவா இருக்கு?
அதனை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கவினை சந்தித்தீர்களா? அவருடன் எடுத்த போட்டோவை போடுங்கள், சீக்கிரம் கவினை கல்யாணம் பண்ணிக்கோங்க என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் லாஸ்லியாவின் போஸை பார்த்தும் இதெல்லாம் நல்லாவா இருக்கு என்றும் கேட்டுள்ளனர்.
நல்லா பாரு..
எக்கா....தயவு செஞ்சு இந்த போட்டோவ நீயே ஒரு தடவை நல்லா பாரு......நல்லாவா இருக்கு?? எதுக்கு இதெல்லாம் போட்டுக்கிட்டு?? என்று கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்.
இப்படி போடாத
இந்தா ஒரு ரூவா இனிமே இப்படி போஸ்ட் போடாத என கலாய்க்கிறார் இவர்.
ஆத்தா என்ன லுக்
ஆத்தா.. என்ன லுக் ஆத்தா இது.. என சின்ன கவுண்டர் படத்தில் கவுண்டமணி மனோரம்மாவை கேட்பதுபோல் கேட்கிறார் இவர்.
போட மாட்றீயே
கவின் கூட சேர்ந்து மட்டும் போட்டோ போட மாட்றீயேம்மா.. என்று கேட்கிறார் இவர்.
ஹேப்பியா இருங்க
அண்ணி அண்ணன கல்யாணம் பண்ணி ஹேப்பியா இருங்க என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











