கையில் குழந்தையுடன் போஸ் கொடுத்த சர்ச்சை நடிகை.. பேத்தியா என கேட்டு மரண பங்கம் செய்த நெட்டிசன்ஸ்!
சென்னை: கையில் குழந்தையுடன் போஸ் கொடுத்த சர்ச்சை நடிகை மீரா மிதுனை நெட்டிசன்ஸ் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
சூர்யாவின் நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தார் மீரா மிதுன். பல சர்ச்ச்சைகளில் சிக்கிய இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
அதிலும் ஹவுஸ்மேட்ஸ்களுடன் வாக்குவாதம், சண்டை சச்சரவு என அதகள படுத்தினார் மீரா மிதுன். முதலில் முகெனுடன் நெருங்கி பழகிய அவர், பின்னர் தர்ஷனை காதலிப்பதாக கூறினார்.

வெளியேற்றம்
ஆரம்பத்தில் சாக்ஷி, அபிராமி ஆகியோர் அவரை கார்னர் செய்ததால் மீரா மிதுன் மீது ரசிகர்களுக்கு அனுதாபம் ஏற்பட்டது. ஆனால் மீரா மிதுன் சேரன் மீது கூறிய குற்றச்சாட்டால் அவரது நிலைமையே மாறியது. அதுவே அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற முக்கிய காரணமாக இருந்தது.

நீக்கம்
வெளியே வந்த பிறகு அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தார் மீரா மிதுன். ஆனால் அதற்கு மாறாக ஏற்கனவே ஒப்பந்தம் ஆன படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார் மீரா மிதுன். இதனால் கடுப்பான அவர் தமிழ் சினிமாவை சரமாரியாக விளாசிவிட்டு தனது திறமைக்கு ஏற்ற இடம் பாலிவுட்டுதான் என்று கூறிச் சென்றார்.

எல்லை மீறும் கவர்ச்சி
ஆனால் அங்கும் மீரா மிதுன் எதிர்பார்த்தது போன்று எதுவும் நடக்கவில்லை. இதனால் சென்னைக்கு திரும்பிய மீரா மிதுன் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். மீரா மிதுன் வெளியிடும் போட்டோக்களிலும் வீடியோக்களிலும் கவர்ச்சி எல்லை மீறுவதால் அவரை திட்டித் தீர்க்கின்றனர் நெட்டிசன்கள்.
Recommended Video
குழந்தையுடன் போட்டோ
ஆனாலும் அசராத மீரா மிதுன், வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் நடிகை மீரா மிதுன் கையில் குழந்தையுடன் போஸ் கொடுத்து போட்டோ எடுத்துள்ளார். அந்த போட்டோவை அவர் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பேத்தியா?
அதனை பார்த்த நெட்டிசன்கள், மீரா மிதுனை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். கையில் வைத்துள்ள இந்த குழந்தை உங்களுடையதா என்று கேட்டுள்ளனர் சில நெட்டிசன்கள். சிலர், என்ன மீரா மிதுன் பாட்டி இது உங்கள் பேத்தியா என்று கேட்டு வெறுப்பேற்றியுள்ளனர். இன்னும் சிலர் அந்த குழந்தையை கூட நிம்மதியாக இருக்க விட மாட்டீர்களா என்றும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











