அடுத்தவர் மனைவியின் உதட்டை வர்ணித்த பிரபல நடிகர்.. உங்களுக்கு எப்படி தெரியும்.. நெட்டிசன்ஸ் நறுக்!
Recommended Video
சென்னை: அடுத்தவர் மனைவியின் உதட்டை வர்ணித்த பிரபல நடிகரை நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்த்திருக்கின்றனர்.
நடிகர் பார்த்திபன் இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர். இதுவரை 15 படங்கள், 14 படங்களை தயாரித்திருக்கிறார். 60 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார்.
அண்மையில் அவர் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ஒத்தசெருப்பு படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படம் பல்வேறு விருதுகளை குவித்துள்ளது..
வெற்றி கூட்டணி
தன்னுடைய தனித்துவமான நடிப்பு, நேருக்கு நேரான பேச்சு, டைமிங் டயலாக் டெலிவரி, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றால் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். வெற்றிக்கொடிக்கட்டு, குண்டக்க மண்டக்க ஆகிய படங்களில் வைகைப் புயல் வடிவேலுவை அலற விடுவார் நடிகர் பார்த்திபன். இதனால் அவர்களின் கூட்டணி எப்போது மீண்டும் சேரும் என காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

ஓவியம் போல
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் பிரபல நடிகையின் போட்டோவை பார்த்து வர்ணித்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதாவது ரவிவர்மாவின் அழகிய ஓவியங்களை போல முன்னணி நடிகைகளை வைத்து புகைப்பட கலைஞர் ஜி வெங்கட்ராம் போட்டோ ஷுட் நடத்தினார். லிமிடெட் எடிசன் காலண்டருக்காக இந்த அசத்தல் போட்டோ ஷுட் நடத்தப்பட்டது.

லிமிட்டெட் எடிசன்
இந்த போட்டோ ஷுட்டில் நடிகைகள் சமந்தா, ஸ்ருதிஹாசன், குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், லிஸி பிரியதர்ஷன், ஷோபனா, ஐஸ்வர்யா ராஜேஷ், நதியா உட்பட 12 நடிகைகள் பங்கேற்றனர். சுகாசினி மணிரத்னத்தின் நாம் அறக்கட்டளை தொடங்கி 10 வருடம் ஆனதை கொண்டாடும் வகையில் லிமிடெட் எடிசன் காலண்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

பார்த்திபன் வர்ணிப்பு
இந்நிலையில் நடிகை குஷ்புவின் அந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன். மேலும் அந்த போட்டோவை பார்த்து தனக்கே உரிய பாணியில் கவிதை மொழியில் வர்ணித்திருக்கிறார். அதாவது, தட்டில் பழங்களும்- உ தட்டில் தட்டுப்படும் புன்னகையும் சுவை! என பதிவிட்டுள்ளார் நடிகர் பார்த்திபன்.
எப்படி தெரியும்?
இதனை பார்த்த நெட்டிசன்கள், அவரை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். குஷ்புவின் கணவரான இயக்குநர் சுந்தர் சி டிவிட்டர்ல இல்லாத தைரியம் தானே பார்த்தி சார் இப்படி பேசுறீங்க என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். அடுத்தவன் பொண்டாட்டி உதட்டு புன்னகை எப்படி உங்களுக்கு சுவையாகும் இயக்குநரே என கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.
உதை கிடைக்கும்
நடிகர் பார்த்திபன் வர்ணித்ததை பார்த்த இந்த ரசிகர் அண்ணா நான் கூட தட்டில் பழம் உ-தட்டில் ஊட்டப்படும் என்று நினைத்தேன் என்கிறார். பார்த்திபன் சார் உங்களுக்கு குசும்பு சார் என்று கிண்டலடிக்கிறார் இவர். உன் தட்டில் இருக்கும் சுவையை மட்டும் ரசி கொண்டாடு.. உன் அருகில் இருக்கும் (உ ) -தட்டை பார்த்தால்.. உதை கிடைக்கும்.. என்று கிண்டலாக கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











