Don't Miss!
- Lifestyle
உங்க ராசிப்படி காதலில் நீங்கள் எந்த விஷயத்தில் சொதப்புவீங்களாம் தெரியுமா? உடனே கரெக்ட் பண்ணிக்கோங்க!
- Technology
Mars: செவ்வாய் கிரகத்தில் செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய நாசா! போட்டிக்கு நீங்களும் வரலாம்!
- News
"பூப்போட்டாராமே".. ஓபிஎஸ்ஸூக்கு "வெள்ளைப்பூ" தந்த பேச்சியம்மாள்.. அதுவும் 3 முறை.. ஹேப்பியில் பன்னீர்
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Finance
அதானி குழுமத்தின் டாப் 5 நிறுவனங்களின் கடன் எவ்வளவு.. PSU வங்கிகள், தனியார் வங்கிகளில் எவ்வளவு?
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் ஸ்பாய்லர்களை டிரெண்ட் செய்யும் நெட்டிசன்கள்.. இலுமினாட்டிகளை அயன்மேன் மீட்பாரா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: அன்னையர் தினத்தை முன்னிட்டு டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் படத்தில் குழந்தைகளுக்காக எதையும் செய்வாள் ஒரு தாய் என்பதை காட்டும் விதமாக வாண்டாவின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஷேர் செய்து ஸ்பாய்லர்களை நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இதுவரை மார்வெல் கட்டி காத்து வந்த ரகசியங்களை எல்லாம் இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்களே என தயாரிப்பாளர்கள் செம டென்ஷனில் உள்ளனர்.
சூரியை
ஓவர்டேக்
செய்த
விஜய்சேதுபதி..
கேஜிஎஃப்
3
எப்படி
இருக்கும்..
பிகேவின்
டாப்
5
பீட்ஸ்
இதோ!
அயன்மேனாக டாம் க்ரூஸ் வருவாருன்னு சொன்னாங்களே அடுத்த பார்ட்ல வந்து அந்த இறந்து போன இலுமினாட்டிகளை காப்பாற்றுவாரா? என நெட்டிசன்கள் அனைத்து ஸ்பாய்லர்களையும் அவிழ்த்து விட்டுள்ளனர்.

டாக்டர் ஸ்ட்ரேஞ்சில் இலுமினாட்டி
மார்வெல் திரைப்படம் மல்டிவெர்ஸ் நோக்கி நகர்ந்துள்ள நிலையில், வேறு ஒரு யூனிவர்ஸில் எக்ஸ்மேன், ஃபெண்டாஸ்டிக் 4, கேப்டன் மார்வெல், லேடி கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட சூப்பர் ஹீரோக்கள் இணைந்து இலுமினாட்டி எனும் ஒரு அமைப்பை (அவெஞ்சர்ஸ் போன்று) உருவாக்கி வைத்திருப்பதாக இதில் காட்டி உள்ளனர்.

எல்லோரும் காலி
தானோஸ் ஒரே சொடுக்கில் பாதி உலகத்தையே காலி செய்தது போல, தனது குழந்தைகளுக்காக போராடும் தாய் பேயாக மாறியுள்ள வாண்டாவை தடுக்க படு பில்டப்புடன் வரும் இந்த இலுமினாட்டி சூப்பர் ஹீரோக்கள் எல்லாம் ஒரு சில நொடிகளில் ஸ்கார்லெட் விட்ச்சின் வெறித்தனமான தாக்குதலில் துவம்சம் ஆகின்றனர்.

அயன்மேன் எங்கே காணோம்
டாம் க்ரூஸ் அயன்மேன் கெட்டப்பில் போட்டோஷூட் நடத்தி உள்ளார். டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸில் அவர் அயன்மேனாக திரும்ப வரப் போகிறார் என சினிமா டிராக்கர்கள் கிளப்பி விட்ட கட்டுக் கதைகளை நம்பி படத்தை பார்த்த பலரும் எங்கே டா டாம் க்ரூஸ், எங்கே அயன்மேன் என கேட்க, அடுத்த பார்ட்டில் வந்து இறந்து போன இலுமினாட்டிகளை அவர் தான் மீட்கப் போகிறார் என மேலும் கட்டுக் கதைகளை கிளப்பி வருகின்றனர்.

அன்னையர் தினத்துக்கு டிரெண்டிங்
இந்த யூனிவர்ஸில் இல்லாத தனது குழந்தைகளை கனவில் கண்டு மகிழ்ந்து வாழ்ந்து வரும் வாண்டாவிடம் வேற யூனிவர்ஸ்க்கு டிராவல் பண்ற பெண் என்னிடம் இருக்கு என உசுப்பேற்றி விட்டு அவரை ஸ்கார்லெட் விட்ச்சாக மாற்றி ட்ரீம் வாக் செய்ய வைத்து வேற யூனிவர்ஸில் உள்ள மகன்களை சந்திக்க போராடும் போராட்டம் தான் மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ் என மொத்தக் கதையையும் நெட்டிசன்கள் அன்னையர் தின ஸ்பெஷலாக சொல்லி டிரெண்ட் செய்து வருகின்றனர்.