பாவம் விக்கி.. ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து ஆறுதல் சொல்லும் விஜய் ரசிகர்கள்.. பறக்கும் மீம்ஸ்!
சென்னை: அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க இருந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் அந்த படத்தில் இருந்து விலகியதை சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுக்கு உணர்த்திய நிலையில், விஜய் ரசிகர்கள் Wikki ஹாஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
நானும் ரவுடி தான் படத்தை கொடுத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் சிரிக்க வைத்த இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கா இப்படியொரு நிலைமை என ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.
அஜித் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதே நல்ல விஷயம் தான் என விஜய் ரசிகர்கள் ட்ரோல் மீம்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் விலகல்
ஏகே 62 என்கிற வார்த்தை மற்றும் நடிகர் அஜித்தின் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இதன்மூலம், தான் ஏகே 62 படத்தில் இருந்து விலகி விட்டேன் என்பதை அனைவரும் அறியும் படி அறிவித்து விட்டார். விக்னேஷ் சிவன் விலகிய நிலையில், விக்கி ஹாஷ்டேக்கை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் டிரெண்ட் செய்து அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

நாங்க இருக்கோம்
இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு எப்போதெல்லாம் சிக்கல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் நடிகர் விஜய்சேதுபதி, நடிகை நயன்தாரா மற்றும் இசையமைப்பாளர் நாங்க இருக்கோம் என சொல்லி அவருக்கு ஒரு சூப்பரான ஹிட் படத்தை கொடுத்து வருகின்றனர் என விக்னேஷ் சிவனுக்கு ஆறுதல் தெரிவிக்கும்படியாக மீம்களை போட்டு வருகின்றனர்.
லைகா அலுவலகத்திலிருந்து
ஏகே 62 படத்தில் இருந்து நீக்கப்பட்டதும் லைகா நிறுவன அலுவலகத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் இப்படித்தான் வெளியே வந்திருப்பார் என அல்லு அர்ஜுன் படத்தின் காட்சியை போட்டு விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். அஜித் படத்தை விட்டு விலகி வந்தது விக்னேஷ் சிவனுக்குத் தான் நல்ல விஷயம் என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

அடிச்சது யார்
விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் என தகவல் கடந்த வாரமே வெளியான நிலையில், கடைசி வரை அஜித் அப்படி விக்னேஷ் சிவனை கழட்டி விடமாட்டார் என்று ரசிகர்கள் நம்பி ட்வீட் போட்ட ஸ்க்ரீன் ஷாட்களை போட்டு, அடிச்சது யாரு என வாரிசு vs துணிவு கிளாஷில் விஜய் வென்றதால் தான் இந்த அதிரடி மாற்றம் என விஜய் ரசிகர்கள் வெறுப்பேற்றி வருகின்றனர்.
எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்
இயக்குநர் விக்னேஷ் சிவன் அஜித்தின் 62வது படத்தை தரமாக கொடுக்க மாட்டார் என நெட்டிசன்கள் கலாய்த்து வந்த நிலையில், அவர் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி உள்ளே வந்தால் ஹாப்பி தான் என அஜித் ரசிகர்கள் அந்தர் பல்டி அடித்து எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும் என வீடியோ போட்டு வருகின்றனர்.
அன்ஃபாலோ விக்கி
அஜித்தின் கவர் பிக்கை தூக்கிய நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவனை அஜித் ரசிகர்கள் அன்ஃபாலோ செய்து வருகின்றனர். ஏகே 62 படத்தில் மொரட்டு அடி அடிக்க தல அஜித் திட்டம் போட்டுத்தான் இயக்குநரையே மாற்றி உள்ளார். அடுத்த படம் விஜய்யின் லியோ படத்துக்கு கடும் டஃப் கொடுக்கும் என அஜித் ரசிகர்கள் போஸ்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











