இப்போ ரம்யா பாண்டியனுக்கு யார் ஜோடி.. என்ன வேணா பண்ணுங்க ஆரியை டான்ஸ் மட்டும் ஆட சொல்லாதீங்க!

சென்னை: பிக் பாஸ் அன்சீன் புரமோவும் இன்னைக்கு வெளியாகி விட்டது. பிக் பாஸ் எடிட்டர் ஃபுல் மோடில் இருக்கிறார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த சீனை எல்லாம் அன்சீன்லயா வைக்கிறீங்க என அன்சீன் புரமோவை பார்த்து ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

வேண்டும் என்றால், அந்த ஆரி டான்ஸ் ஆடுவதை மொத்தமாக அன்சீனில் வைத்து விடுங்கள் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

இது வேறயா

இது வேறயா

பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் யங் பாட்டியாக இருந்த அர்ச்சனா, இந்த அன்சீனில் வயசான பாட்டியாக மாறி உள்ளார். மேலும், ஜோடிகளும் சற்று மாறி உள்ளதாகவே தெரிகிறது. அதே டாஸ்க் தான் நடக்குதா? இல்லை இது அடுத்த டாஸ்க்கா? என்றும் ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.

ரம்யா யாருக்கு ஜோடி

ரம்யா யாருக்கு ஜோடி

ரம்யா பாண்டியனை நேற்று சோமசேகருக்கு ஜோடியாக்கி அழகு பார்த்த பிக் பாஸ், இந்த அன்சீன் புரமோவில் ஆரியுடன் கோர்த்து விட்டுள்ளார். ஆனால், சர்க்கார் பட விஜய் காஸ்ட்யூமில் சோமசேகரும் இருவருக்கும் நடுவே ஆடுவதால், மண்டையை பிய்த்துக் கொண்டு பிக் பாஸ் ரசிகர்கள் இந்த புரமோவை பார்த்து வருகின்றனர்.

சனம் சமாதானம் ஆகிட்டாங்க போல

சனம் சமாதானம் ஆகிட்டாங்க போல

அனிதா சம்பத், ஆரியுடன் நேற்று சண்டை போட்டுக் கொண்டிருந்த சனம் ஷெட்டி அவர்களுடன் இணைந்து இந்த தீபாவளிக்கு தெறிக்க விடலாமா என பஞ்ச் வசனம் பேசுவதை பார்த்த ரசிகர்க, அடடே, சனம் ஷெட்டி சமாதானம் ஆகிட்டாங்க போல தெரியுதே என கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ஷிவானியை விடாத பாலா

ஷிவானியை விடாத பாலா

ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றாக இருக்கும் ஃபிரேமில், ஷிவானி மேல கை போட்டுக் கொண்டு தனியாக தனது வேலையை பாலா பார்த்துக் கொண்டிருப்பதையும் பிக் பாஸ் ரசிகர்கள் கேட்ச் பண்ணி கலாய்த்து வருகின்றனர். ஷிவானியை விடுறதா இல்லை போல என கமெண்ட் அடித்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஆரியை ஆட மட்டும் சொல்லாதீங்க

ஆரியை ஆட மட்டும் சொல்லாதீங்க

திடீரென பிக் பாஸ் எடிட்டர் ஆரியின் வெறியன் ஆகிவிட்டார் போல தெரிகிறது. பாத்ரூம் ஏரியா, கார்டன் ஏரியா என ஏகப்பட்ட இடங்களில் சூர்யா போல எகிறி குதித்து ஆட ட்ரை பண்ணும் ஆரியின் காட்சிகளாக அன்சீனில் அடுக்கி வைத்திருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள், எதை வேணா பண்ணுங்க ஆரியை ஆட மட்டும் சொல்லாதீங்க என கழுவி ஊற்றி வருகின்றனர்.

அன்சீனோட இருக்கட்டும்

அன்சீனோட இருக்கட்டும்

மேலும், இந்த கன்றாவி கூத்தெல்லாம் அன்சீனோட இருக்கட்டும், பிக் பாஸ் மெயின் புரோகிராம்ல வந்துச்சு அவ்ளோதான் எங்களுக்கு கெட்ட கோபம் வந்துடும் பாருங்க என கொந்தளித்து வருகின்றனர். பாட்டியிடம் உயில் கிடைத்த பிறகு, அனைவருக்கும் பிரித்துக் கொடுத்து குடும்பமாக இருக்கும் சீன் தான் என சிலர் ரிவீலும் செய்துவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X