ஏன் இந்த வெட்டி வீராப்பு.. இதுக்குதான் தூக்கி வீசினாங்க.. அபிஷேக்கை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடை பார்த்த நெட்டிசன்கள் அபிஷேக் ராஜாவை வச்சு செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பிரியங்கா மீதான பொஸ்ஸஸிவ்வை வெளிப்படுத்திய அபிஷேக் ராஜா, நிரூப்பின் மண்டையை உடைத்துவிடுவேன், மூஞ்சை உடைத்துவிடுவேன் என கடுமையாக பேசினார்.

அதே வேகத்தில் வெளியே சென்ற அபிஷேக் ராஜா, நிரூப்பை பார்த்ததும் அப்படியே பம்மி விட்டார். மென்மையாக பேசிவிட்டு இடத்தை காலி செய்தார்.

தலையில் சுடு தண்ணீர் ஊற்றி

தலையில் சுடு தண்ணீர் ஊற்றி

தொடர்ந்து உள்ளே வந்த அபிஷேக் ராஜா, பிரியங்காவை அழக்கூடாது என கூறினார். பின்னர் பிரியங்கா தனக்கு சுடு தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். இதையடுத்து சுடு தண்ணீர் போட்டு எடுத்து வந்த அபிஷேக், பிரியங்கா அழுததால் தன்னை காயப்படுத்திக் கொள்ளும் வகையில் அந்த தண்ணீரை தன் தலையிலேயே ஊற்றிக் கொண்டார்.

கொளுத்திக்கிட்டு கன்டென்ட் கொடுப்பேன்..

கொளுத்திக்கிட்டு கன்டென்ட் கொடுப்பேன்..

இதனை பார்த்த நெட்டிசன்கள் அபிஷேக் ராஜாவை பங்கமாய் கலாய்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த நெட்டிசன், அபிஷேக் ஒரு எரிச்சலூட்டும் சூழ்ச்சியாளர்.. மூஞ்ச உடைச்சிருவேன், உன் மூஞ்சில சூடு தண்ணி ஊத்துவேன், வீட்ட கொளுத்துவேன்..... போன்ற வார்த்தைகளை சொல்லி... நீங்கள் என்ன நிரூபிக்க முயற்சிக்கிறீர்கள்? கொளுத்திக்கிட்டு கன்டென்ட் குடுப்பேனு சொன்னது இதுதானாடா சுவாரஸ்ய சைக்கோ.. என விளாசியுள்ளார்.

பெண்களை எப்படி மதித்துள்ளார்

பெண்களை எப்படி மதித்துள்ளார்

அபிஷேக்கின் பர்ஃபாமர்ன்ஸை பார்த்த இந்த நெட்டிசன், முழு முட்டாள்தனம். நிஜ வாழ்க்கையில், அபிஷேக் தனது வாழ்க்கையில் பெண்களை எப்படி நடத்தினார் என்பதையும், ராஜூ தனது வாழ்க்கையில் பெண்களை எப்படி நடத்தினார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். எப்போ பார்த்தாலும் வுமன் கார்டு, ஜென்டர் கார்டு என்று பேசிக்கொண்டு... என சாடியுள்ளார்.

பிக்பாஸ் வரலாற்றில்

பிக்பாஸ் வரலாற்றில்

நேற்றைய எபிசோடில் அபிஷேக் மற்றும் பிரியங்காவின் பர்ஃபாமன்ஸை பார்த்த இந்த நெட்டிசன், பிக்பாஸ் வரலாற்றில் மிகவும் பயமுறுத்தும் ஜோடி என்றால் அபிஷேக்கும் பிரியங்காவும் தான். . அவர்கள் செய்வது மிகவும் அழகாக இருப்பதாக அவர்கள் நினைத்தால், மன்னிக்கவும், அது மிகவும் பயமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

ரொம்ப பொஸ்ஸஸிவ்..

ரொம்ப பொஸ்ஸஸிவ்..

நேற்றைய எபிசோடை பார்த்த இந்த நெட்டிசன், இந்த அபிஷேக் வேற.. அவர் பிரியங்காவிடம் கேரிங்காக இருக்கலாம்... ஆனால் அதனை காட்டும் விதம் ஆரோக்கியமானதாக இல்லை.. ரொம்ப பொஸ்ஸஸிவ்வாகவும் பாதுகாப்பற்றும் உணருகிறார் என பதிவிட்டுள்ளார்.

சேஃபா தலையில்... நடிகன்டா..

சேஃபா தலையில்... நடிகன்டா..

நேற்றைய எபிசோடில் அபிஷேக் நடந்து கொண்ட விதத்தை பார்த்த இந்த நெட்டிசன், இந்த டகால்டி மூஞ்சில ஊத்திக்கிறேனு சொல்லிட்டு தலையில எப்படி சேஃபா ஊத்திகிறானு பாருங்க நடிகன்டா !!! என அவரை விளாசியுள்ளார்.

2 நாள் தானே..

2 நாள் தானே..

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த இந்த நெட்டிசன், டேய் அபிஷேக்... தலைவா.. சத்தியமா முடியலடா... 2.0 அது இதுன்னு சொல்லிட்டு இருந்தாங்க... 2 நாள் தானே கம்முன்னு இருந்துட்டு போய் இருக்கலாம்ல... என பதிவிட்டு பங்கம் செய்துள்ளார்.

Recommended Video

Bachelor Audience Opinion | படம் பாக்காதீங்க Bro.. | GV.Prakash,
வெளிய தூக்கி வீசினாங்க..

வெளிய தூக்கி வீசினாங்க..

நேற்றைய எபிசோடில் அபிஷேக் பர்ஃபாமர்ன்ஸை பார்த்த இந்த நெட்டிசன், அபிஷேக் செம காமெடி பண்றாப்ல.. நிரூப்ப மூஞ்சிய உடைச்சிடுவேன்னு வெளிய வேகமாப் போய்ட்டு... பம்முறியேப்பா... ஏன் இந்த வெட்டி வீராப்பு... ஏற்கனவே சொடக்கு போட்டதுக்குதான் மக்களே வெளிய தூக்கி வீசினாங்க.... திருந்து ராஜா என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X