இது என்னடா கண்ணகிக்கு வந்த சோதனை.. ட்ரோலில் சிக்கிய சுஹாசினி!

சென்னை: நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர், தொகுப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் நடிகை சுஹாசினி. தற்போது சுகாசனியை இணையவாசிகள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். அந்த ட்ரோலுக்கான காரணம் என்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் இதுவும் ஒன்று. அதில், ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளதைச் சிறப்பிக்கும் வகையில் வாழ்நாள் சாத்தையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்த விழாவில், சிலப்பதிகாரம் குறித்து நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கண்ணகி கதாபாத்திரத்தில் நடிகை சுஹாசினி நடித்திருந்தார். மேடையில் தோன்றிய சுஹாசினி, கையில் வாட்ச் அணிந்திருந்தார். இதைப்பார்த்த இணையவாசிகள் இது என்ன டெக்னாலஜி எல்லாம் தெரிந்த மாடர்ன் கண்ணகியா? என கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டனர். அதோடு விடாமல் கண்ணகி என்றாலே, பலருக்கும் நினைவுக்கு வருவது கண்ணகியின் ஆக்ரோஷமான முகம் தான். நாடகத்தில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுவது கண்ணகி சிலம்பை உடைக்கும் காட்சி தான். அந்த காட்சி பலரை மெய் சிலிர்க்க வைத்துவிடும்.

Suhasini Kannagi drama
Photo Credit:

நடிகை சுஹாசினி: ஆனால், அந்த காட்சியில் நடித்த சுஹாசினியின் முகத்தில் ஆக்ரோஷம் மிஸ்சிங், மேலும் கையில் இருந்த சிலம்பை பட்டும் படாதபடி படி மெதுவாக கீழே போட்டு உடைத்துவிட்டு, கண்ணகி நாடகத்தில் வரும் அந்த உணர்ச்சிபூர்வமான வசனத்தை சுஹாசினி எப்படி பேசப்போகிறார் என அனைவரும் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், சுஹாசினி அந்த வசனத்தை ஆங்கிலத்தில் பேசியது அனைவரையும் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைய செய்துவிட்டார். இதைப்பார்த்து மேலும் கடுப்பான இணையவாசிகள் இது என்னடா கண்ணகிக்கு வந்த சோதனை என்று பலரும் சுகாசினியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

கண்ணகிக்கு வந்த சோதனை: இப்படி கண்ணகி நாடகம் குறித்து இணையத்தில் பலர் சுஹாசினியை கடுமையாக விமர்சித்தாலும், பலதரப்பட்ட ரசிகர்களை கவரும் வகையிலும், அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காகத்தான் சுகாசினி துல்லியமான அந்த வசனத்தை ஆங்கிலத்தில் பேசினார். அதை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும் என்றும், இணையத்தில் சிலர் வேண்டுமென்றே வன்மத்தோடு சுகாசினியை விமர்சனம் செய்து வருகின்றனர் என சிலர் சுகாசினிக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X