பண்ண டேமேஜ் போதாதா.. மறுபடியும் முதல்ல இருந்தா.. பிக்பாஸ் மறு ஒளிபரப்பை பங்கமாக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: விஜய் டிவியில் மீண்டும் பிக் பாஸ் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் அதை வழக்கம் போல பங்கமாக ட்ரோல் செய்து கலாய்த்து வருகின்றனர்.

வரும் ஜனவரி 25ம் தேதி முதல் பிற்பகல் 2.30 மணிக்கு அன்சீன் காட்சிகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்ய உள்ளதாக விஜய் டிவி அறிவித்துள்ளது.

விஜய் மியூசிக்கில் ஒளிபரப்ப உள்ள மறு ஒளிபரப்பை தேவை இல்லாத ஆணி என ஏகப்பட்ட நெட்டிசன்கள் பங்கம் செய்து வருகின்றனர்.

எல்லார் கையிலும் பீர்

எல்லார் கையிலும் பீர்

பிக் பாஸ் வீட்டில் ஸ்மோக்கிங் ஏரியா இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், பீர் உள்ளிட்ட சரக்குகளும் புழங்குவதாகவும் அதை எடிட்டிங்கில் கட் செய்து விடுகின்றனர் அந்த காட்சிகளையும் அன்சீனில் போடுவீங்களா பாஸ் என பிக் பாஸை பங்கமாக கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஆணியே புடுங்க வேணாம்

ஆணியே புடுங்க வேணாம்

இந்த சீசனை இதுவரை பார்த்ததே பெரிய விஷயம். இப்படியொரு மொக்கையான சீசனை அந்த போட்டியாளர்களே திரும்பி பார்க்க மாட்டார்கள், மறுபடியும் ஒளிபரப்புவது தேவையில்லாத ஆணி என்றும், ஆணியே புடுங்க வேணாம் என்றும் வேற லெவலில் பிக் பாஸ் தமிழ் சீசன் 4ஐ கலாய்த்து வருகின்றனர்.

கூச்சமே இல்ல

கூச்சமே இல்ல

கொஞ்சம் கூட கூச்சமே இல்ல, மறுபடியும் இந்த மொக்கை சீசனை ஒளிபரப்ப போறிங்களா விஜய் டிவி என ஏகப்பட்ட நெட்டிசன்கள் கமெண்ட் செக்‌ஷனில் கதறி வருகின்றனர். இதுவரை வெளியான பிக் பாஸ் சீசன்களை விட அதிக டிஆர்பி கொடுத்தது இந்த சீசன் தான் என்பதால் தான் மறு ஒளிபரப்பு செய்து மீண்டும் கல்லா கட்ட பார்க்கிறது விஜய் டிவி என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அநியாயம் பண்றீங்க

அநியாயம் பண்றீங்க

ஏன்டா இந்த அநியாயம் பண்றீங்க, இப்போதான் ஒரு வழியா ஒரு தலைவலி முடிஞ்சதுன்னு சந்தோஷமா இருக்கோம், மறுபடியும் பாலாஜி சண்டை போடறதையும், அன்பு தாயி அர்ச்சனா குரூப் சேர்த்து விளையாடறதையும் டம்மி மம்மி சம்யுக்தாவின் பார்ஷியல் பாசத்தையும், ஏகப்பட்ட மிக்சர் தின்னிகள் சும்மாவே இருந்து பைனல்ஸ் போனதையும் பார்க்கணுமா? என கேட்டு வெளுத்து வருகின்றனர்.

பண்ண டேமேஜ் போதாதா

பண்ண டேமேஜ் போதாதா

அர்ச்சனா ஆயா, பைத்தியம் பாலா, விஷபாட்டில் ரம்யா, குட்டி சினேகன் ரியோ, வேர்க்கடலை சோம், மிக்சர் ஆஜித், தூங்குமூஞ்சி ரமேஷ், வாயாடி அனிதா, காமெடி பீஸ் கேபி, பாலா மாமா ஷிவானி, அப்பா நிஷா, நேர்மை ஆரி, கொளுத்திப் போடு சுரேஷ் தாத்தா, சண்டை சனம் என ஏற்கனவே நீங்க பண்ண டேமேஜ் போதாதா.. மறுபடியும் போட்டு டேமேஜ் பண்ணனுமா? என திட்டி தீர்த்து வருகின்றனர்.

அவங்க பார்ப்பாங்க

அவங்க பார்ப்பாங்க

ஹாட்ஸ்டாரில் ஓட்டி ஓட்டி பார்க்காம, முதல்ல இருந்து பிக் பாஸ் போட்டியாளர்கள் விளையாடிய லட்சணத்தை மீண்டும் பார்க்கும் வாய்ப்பாகவே இந்த ஒளிபரப்பு இருக்கும், பாலாவின் அவுட் ஆஃப் பாக்ஸ் திங்கிங், ஆரி எப்படி எரிமலையாக வெடித்தார் என எல்லாத்தையும் பார்க்கலாம் என சில தீவிர பிக் பாஸ் வெறியர்கள் மறு ஒளிபரப்புக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X