Just In
- 3 hrs ago
பேய் அறைஞ்ச மாதிரியே இருக்கும் ரியோ.. ட்ரோல்களை கண்டு துவண்டு விடாதே என பாடம் நடத்திய கமல்!
- 4 hrs ago
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- 5 hrs ago
பாராட்டு மழையில் நனைந்த மாஸ்டர் மகேந்திரன்... நீண்ட வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி!
- 5 hrs ago
இந்த பிக் பாஸ் சீசனை கெடுத்ததே இவங்கதான்.. அர்ச்சனாவை குற்றம்சாட்டும் நெட்டிசன்கள் ஏன்?
Don't Miss!
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாலாவின் சீக்ரெட் ஏஜன்ட் ஆஜீத்.. பயில்வான் எழுதி கொடுத்தது.. ஆஜீத்தை இப்படி பங்கம் பண்றாங்களே!
சென்னை: ஆரி கிட்ட லிஸ்ட் எழுதி வச்சிட்டு கேள்வி கேட்கும் பாலா, ஆஜீத்துக்கும் எழுதி கொடுத்து அர்ச்சனாவை அப்படி கேள்வி கேட்க ஏவி உள்ளார் என நெட்டிசன்கள் புரமோவை பார்த்த பிறகு பொங்கி வருகின்றனர்.
ஆஜீத் விளையாடாமல் வெறும் பாட்டு பாடிக் கொண்டே ஷோவை ஓட்டுகிறார் என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அர்ச்சனாவிடம் அப்படியொரு கேட்டதும், அதை நம்ப ரசிகர்கள் மறுக்கின்றனர்.
பாலாவின் அணியாகவே ஆஜீத், ஷிவானி செயல்படுகின்றனர் என ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகளை போட்டு சுட்டிக் காட்டி வருகின்றனர்.

பயில்வானின் பாடிகார்டு
"இவனை நாம் பொடிப்பையன்னு நினைச்சா அது தப்பு!... ஏன்னா அவன் பயில்வானின் பாடிகார்டு!.. இந்த ஆஜீத்து அடாவடி பயில்வானுக்கு அடியாளாகவே மாறிட்டான்" என ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகளை இந்த பிக் பாஸ் ரசிகர், இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்து விட்டு பதிவிட்டுள்ளார்.

புள்ளபூச்சி ஆஜீத்
"டேய் #புள்ளபூச்சி_ஆஜித் அவங்க Strategy அன்பு தான்!!! அர்ச்சனாவுக்கு அன்பு வேணும்!!! காசு வேணும் டா.... எல்லாமே நடிப்பு தான்!!!!" என சுரேஷ் தாத்தாவின் ரியாக்ஷன் போட்டோவை போட்டு ஆஜீத்துக்கு ஹாஷ்டேக்கையும், அர்ச்சனாவையும் ஒரு சேர கலாய்த்துத் தள்ளியுள்ளார் இந்த நெட்டிசன்.

எப்ப போவீங்க
"நீங்க இப்ப ஜெயிக்கனும்னு நினைக்கறீங்களா, இல்லைனா வீட்டுக்கு போகனும்னு நினைக்கறீங்களா, அப்படியே வீட்டுக்கு போகனும்னு நினைச்சாலும் எப்ப போவீங்க..." என சந்திரமுகி போட்டோலாம் போட்டு ஓவராக பங்கம் பண்ணி உள்ளார் இந்த பிக் பாஸ் ரசிகர்.

குயின் பீஸுக்கு செக்
எல்லாருமே அவனை சிப்பாயா பார்க்கும் போது, அவன் குயின் பீஸுக்கே செக் வைக்க பார்த்தான். அவன் தான் ஆஜூ பாய் என ஆஜீத்தின் ஸ்மார்ட்னஸையும் அதிரடியான கேள்வியையும் வைத்து புகழ்ந்து தள்ளி உள்ளார் இந்த நெட்டிசன். அர்ச்சனாவின் பதில் எப்படி இருந்தது என்பதை பார்க்கத்தான் ரசிகர்கள் ஆர்வம்.

ஆஜீத்துக்கு 50 ஓட்டு
அமைதியா இருந்தா டம்மி இல்லை.. அடி ஒவ்வொன்றும் அம்மி மாதிரி இருக்கும். அதுதான் ஆஜீத்! என ஏகப்பட்ட ஆஜீத் ஆர்மியினரும், இந்த புரமோவை பார்த்து விட்டே ஆஜீத்துக்கு 50 ஓட்டு தினமும் போட்டு சேவ் பண்ணும் வேலையை ஆரம்பித்து விட்டனர். எபிசோடுக்கு அப்புறம் மாறுமா? பார்க்கலாம்.

மளிகை கடை லிஸ்ட்
முதல் இரு புரமோக்களில் ஆரிக்கும் பாலாவுக்கும் நடந்த கான்வர்சேஷனை இந்த ரசிகர் ட்ரோல் செய்துள்ளார். "ஆரி பேகேஜ் வச்சிருக்காரோ இல்லையோ.. இவன் பெரிய மளிகை கடை லிஸ்ட் வச்சிருக்கான்" என கலாய்த்துள்ளார். அதற்கு அன்பு ஸ்டோர்ஸ் என கமெண்ட் போட்டு இன்னொரு ரசிகையும் கலாய்த்துள்ளனர்.

என் கிட்டயே மோதுறியா
சுரேஷ் சக்கரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் கண்களிலேயே விரல் விட்டு ஆட்டுன ஆர்ச்சனாவிடமே ஆஜீத் மோதுறானா என்றும், என் கிட்டயே மோதப் பார்க்குறீயா என அர்ச்சனா முறைப்பது போலவும், கால் முடியட்டும் தம்பி உனக்கு இருக்கு என்றும், இந்த வாரம் நீ தான் வெளியே போகப் போற தம்பி என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் அர்ச்சனாவின் அன்பு ஆர்மியிடமிருந்து குவிந்து வருகிறது.

பயில்வான் எழுதி கொடுத்தது
அஜ்ஜுவுக்கு எவ்ளோ அறிவு என்று எல்லோருமே ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், பாலாஜி முருகதாஸ் சொல்லிக் கொடுத்து தான் அஜ்ஜு இந்த கேள்வியை அர்சனாவிடம் கேட்கிறார் என போதி தர்மர் உணர்கிறார் என வேற லெவலில் பங்கம் பண்ணி ஆஜீத்தை டோட்டலாக ஓட்டி வருகின்றனர்.