For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கரடியே காரித்துப்பிய மொமன்ட்.. பாலாவை போரிங்னு தேர்வு செய்த ரமேஷ்.. இதுக்கு மேல அசிங்கம் தேவையா?

  |

  சென்னை: யார் பேச்சையும் கேட்காமல், ஏன் பிக் பாஸ் பேச்சையும் கேட்காமல் விளையாடி ஜெயிக்கலாம் என நினைத்த பாலாவுக்கு சரியான சவுக்கடி கிடைத்துள்ளது.

  போரிங் போட்டியாளரா நம்மள ஆக்கிடுவாங்களோன்னு பாலா பயந்து நடுங்கியது போலவே இப்போ ஆகிடுச்சு என பிக் பாஸ் ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

  அதிலும், ஜித்தன் ரமேஷே பாலாவை போரிங் போட்டியாளர் என சொன்னது தான் தரமான சம்பவம்.

  ஈடுபாடு இல்லை

  ஈடுபாடு இல்லை

  பிக் பாஸ் வீட்டுக்கு வரும் போதே, தான் எதையும் செய்ய மாட்டேன், விஐபி போட்டியாளராகத் தான் வருவேன் என அக்ரீமென்ட் போட்டுக் கொண்டு வந்திருப்பார் போல, ஜித்தன் ரமேஷ். எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல், ஆடியன்ஸாகவே பிக் பாஸ் வீட்டில் அவர் இருந்து வருவதை ஏகப்பட்ட ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

  கரடியே காரித் துப்பிடுச்சு

  கரடியே காரித் துப்பிடுச்சு

  அப்படி கரடி போல பிக் பாஸ் வீட்டில் முழு போரிங் போட்டியாளராக இருக்கும் ஜித்தன் ரமேஷே, பாலாஜி முருகதாஸை போரிங் என சொல்லியதை பார்த்த ரசிகர்கள், அந்த கரடியே காரித் துப்பிடுச்சு என பாலாஜி முருகதாஸை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். பயில்வானுக்கு இதை விட அசிங்கம் தேவையில்லை என முதல் புரமோவை பார்த்து ஏகப்பட்ட ட்ரோல்கள் பறந்து வருகின்றன.

  பெரிய டாஸ்க்கை பஞ்சர் பண்ணது யாரு

  பெரிய டாஸ்க்கை பஞ்சர் பண்ணது யாரு

  லக்சரி பட்ஜெட் டாஸ்க்கான பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் சொதப்பி மொத்த குடும்பத்தின் சோற்றிலேயே கை வைத்தது குறித்து கொஞ்சமும் வருத்தப்படாமல், லெமண் அண்ட் ஸ்பூன் மாதிரி குழந்தை பசங்களுக்கு கொடுத்த சீட் எடுத்து, கப்பை உள்ளே போடுறது போன்ற கேமில் ஜெயித்து விட்டு சீன் போடுறாரு பாலா என கலாய்த்து வருகின்றனர்.

  போரிங் மட்டும் இல்லை

  போரிங் மட்டும் இல்லை

  பாலாஜி முருகதாஸ் போரிங் பெர்ஃபார்மர் மட்டும் இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியின் வொர்ஸ்ட் பெர்ஃபார்மரும் அவர் தான் என ஏகப்பட்ட ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ஷிவானி மற்றும் சுச்சிக்கிட்ட மட்டுமே பேசுறான், மத்த எதிலும் கலந்துக்குறதும், கண்டுக்கறதும் இல்லை என திட்டித் தீர்த்து வருகின்றனர்.

  வாழும் வரலாறு

  வாழும் வரலாறு

  நேற்றைய தீபாவளி ஸ்பெஷல் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள், கமல் சார் பெர்ஃபார்மன்ஸை பார்த்து விட்டு, வாழும் வரலாறு! இந்த நடிப்பை பார்ப்பதற்கு நமக்கு கண் கோடி வேண்டும் என கமல்ஹாசனை பாராட்டி உள்ளார் இந்த அதி தீவிர பிக் பாஸ் ரசிகை.

  தங்கக்கட்டி

  தங்கக்கட்டி

  கடந்த வாரம் முழுக்க கேபி சிறப்பாக விளையாடினார். அடுத்த வாரம் தலைவர் பொறுப்பு அவருக்குத்தான் கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், கடைசியில் ஆஜீத் அதை தட்டிச் சென்றார். ஒவ்வொரு போட்டியாளர்களின் காலை நடனத்தையும் அழகாக நடனமாடி கிண்டல் செய்த கேபியை தங்கக்கட்டி என இந்த நெட்டிசன் பாராட்டி உள்ளார்.

  ரூட்டை மாற்றும் ஷிவானி

  ரூட்டை மாற்றும் ஷிவானி

  என்ன பேச விடமாட்றாங்க, எல்லாத்தையும் ரியோவும் அர்ச்சனாவுமே பண்ணிடுறாங்க என சம்யுக்தாவிடம் ஷிவானி பேசியதை போட்டு கலாய்த்து வருகின்றனர். மிக்சர் சாப்பிட்டுக்கிட்டு பாலாவுக்கு மசாஜ் பண்ணிட்டு இருந்தா எப்படி பேச விடுங்க என ட்ரோல்கள் பறக்கின்றன. பாலாவை தூக்கி ஜெயிலில் போட்டு, ஷிவானியை பிரித்தால் தான் அவரது தனித்திறமை வெளியே வரும்.

  English summary
  Netizens troll Balaji Murugadoss after Jithan Ramesh nominate Bala as a boring contestant after watching today promo 1.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X