ஜெயிலுக்குப் போன பயில்வான்.. ஜாலியான ரசிகர்கள்.. பறக்குது ட்ரோல் மீம்கள்.. தரமான செய்கை!
சென்னை: பாலாஜி முருகதாஸ் ஜெயிலுக்கு போனதை சுற்றியே இன்றைய மூன்று புரமோக்களும் வெளியாகின.
இந்நிலையில், பாலாஜி முருகதாஸை ட்ரோல் பண்ணி ரசிகர்கள் எப்படி எல்லாம் கலாய்த்துள்ளனர் என்பதை பார்போம்.
ஒவ்வொரு மீமும், ஒவ்வொரு ட்ரோலும் வேற லெவல் தரமான செய்கையாக இருக்கிறது.

டகால்டி பயில்வான்
"யோவ் பிக்பாசு!... இப்படி ஆப்சனே இல்லாம டக்னு டகால்டி பயில்வான் தான் உள்ளே போகணும்னு பொளேர்னு சொல்லிடியே!.." என முதல் புரமோவை பார்த்தே ஏகப்பட்ட ரசிகர்கள் பாலாவை வைத்து செய்ய ஆரம்பித்தது. மூன்றாவது புரமோ வந்தும் முடியவில்லை.

உருப்படியான காரியம்
"இத்தனை வாரத்தில் பிக் பாஸ் பண்ண உருப்படியான காரியம் இந்த worst performers அவரே சொன்னது தான். இல்லைனா இந்த ஹவுஸ்மேட்கள் ஆட்டுமந்தைகள் மாறி இஷ்டத்துக்கு வொர்ஸ்ட் பர்ஃபார்மார்களை மாற்றி மாற்றி சொல்லுங்க என செம கடுப்பில் கமெண்ட் அடித்துள்ளார் இவர்.

அண்ணனோட விளையாடுறா
சொந்த அண்ணன் உண்மையா ஜெயிலுக்குப் போனா கூட எந்த ஒரு தங்கச்சியும் இப்படி ஃபீல் பண்ண மாட்டா.. ஷிவானி நாராயணன் பாலா பின்னாடி இப்படி நாய்க்குட்டி மாதிரி சுத்தி சுத்தி வருவதும் காமப் பார்வை பார்ப்பதையும் பார்த்த ரசிகர்கள், ஷிவானி அவ அண்ணனோட விளையாடுறா என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

இந்த ஜோடியை வாழ்த்தலாமே
வந்ததுல இருந்தே பாலாஜி முருகதாஸ் மேல ஓவர் கண்ணாக இருக்கும் சுசித்ரா, இப்போ, அவன் கூட சேர்ந்து ஒண்ணாவே ஜெயிலுக்கும் போயிட்டாங்க, இதை பார்த்த நெட்டிசன்கள், இந்த ஜோடியை வாழ்த்தலாமே பிரண்ட்ஸ் என வெறித்தனமாக கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

ரெண்டு லூசுங்கலயும்
"புடிச்சி ஜெயில்ல போடுங்க பிக் பாஸ் இந்த ரெண்டு லூசுங்கலயும்" என அவங்க ரெண்டு பேரையும் ஜெயில்ல போட்ட பிறகும் வெறி கொண்டு இப்படி ட்வீட் போடுறாருன்னா, இத்தனை நாளா எவ்ளோ டார்ச்சரை அனுபவிச்சிருப்பாரு பாவம். ஒரே ஒரு எபிசோடுல மொத்த ரசிகர்களையும் ஹேப்பி ஆக்கிட்டார் பிக் பாஸ்.


Click it and Unblock the Notifications











