Don't Miss!
- News
குடியரசு தின வரவேற்பு: ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் மீண்டும் தமிழ்நாடு, திருவள்ளுவர் ஆண்டு!
- Automobiles
கார்களுக்கு பதிலா இந்த ஆட்டோக்களையே வாங்கிடலாம் போல... விலையோ கம்மி, வசதியோ மிக அதிகம்!
- Lifestyle
Today Rasi Palan 23 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் பண பிரச்சனை நீங்கிடும்...
- Sports
U-19 மகளிர் உலக கோப்பை- 59 ரன்களில் சுருண்ட இலங்கை.. இந்திய அணி அபார வெற்றி
- Finance
Budget 2023:பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய அறிவிப்புகள்..!
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
விடாது கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..நொந்து நூடுல்ஸான நெல்சன்.. பாவம் விடுங்கப்பா !
சென்னை : பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சனை இணையவாசிகள் விடாது கலாய்த்து வருகின்றனர். இதனால், அவர் நொந்து நூடுல்சாகி உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் விஜய் கடைசியாக நடித்த படம் பீஸ்ட்.
மனநலம்
பாதிக்கப்பட்ட
ரஜினி
ரசிகர்..
ரஜினியின்
உதவிக்காக
3
ஆண்டாக
காத்திருக்கும்
குடும்பம்!
இந்த படம் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. மற்ற படங்களுக்கு இல்லாத அளவில் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு இருந்தது.

நெல்சன் திலீப்குமார்
கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, பீஸ்ட் திரைப்படமும் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலரிலேயே பீஸ்ட்டின் மொத்த கதையும் தெரிந்துவிட்டதால், இது என்ன யோகிபாபு நடித்த கூர்கா திரைப்படம் போல இருக்கு என்று கிண்டலடிக்கத் தொடங்கினர்.

பெருத்த ஏமாற்றம்
ஆனால், நெல்சனோ, , இது கூர்கா திரைப்படம் இல்லை, இப்படத்தின் கதையை வேறு என பேட்டியின் போது கூறியிருந்தார். இதனால் பீஸ்ட் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து இருந்தனர். இதையடுத்து, திரையரங்குகளில் போய் படத்தை பார்த்தவர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. விஜயை எந்த மாதிரி எல்லாம் காட்டக் கூடாதோ அப்படியெல்லாம் வச்சி செஞ்சிருப்பார் இயக்குனர் நெல்சன்.

பெருத்த அடி
மேலும் இந்த படம் வெளியான மறு நாளே கே.ஜி.எஃப் 2 படம் ரிலீஸானதால், அந்த படம் பீஸ்ட் படத்தை முழுசாக காலி பண்ணிவிட்டது. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை, இரண்டு நாட்களிலேயே திரையரங்கிலிருந்து தூக்கிவிட்டனர். இதனால், பீஸ்ட் திரைப்படத்திற்கு பெருத்த அடி.

தலைவர் 169
பீஸ்ட் திரைப்படத்தைப்பார்த்து மிகவும் கடுப்பான இணையவாசிகள் நெல்சனை பங்கமாக கலாய்த்தனர். பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே தலைவர் 169 திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை கைப்பற்றினார் நெல்சன். 'பீஸ்ட்' படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றதை அடுத்து ரஜினியின் படத்தை எப்படி எடுக்கப்போகிறார் என்று ரசிகர்கள் கண்ணில் விளக்கு எண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்த்து வருகின்றனர்.
|
நெல்சனை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்
இதையடுத்து, 'தலைவர் 169' படத்தில் வெற்றியை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் நெல்சன் இருப்பதால், ரஜினி கே.எஸ்.ரவிகுமாரை உடன் வைத்துகொண்டு கதை எழுத சொல்லியிருக்கிறார். இந்நிலையில் நெல்சன் தோல்வியிலிருந்து மீள பயிற்சி எடுப்பதை சார்ப்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா பாக்ஸிங்கில் ஜெயிக்க " நீயே ஒளி" என்ற பாடலுடன் தீவிர உடற்பயிற்சி செய்வார். அந்த வீடியோவை பதிவிட்டு நெல்சனை ட்ரோல் செய்துள்ளனர் இணையவாசிகள்.