அட போங்கடா… ஆவுனா கேங்குனு சொல்றது… பிரியங்காவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ் !
சென்னை : பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா, அபிஷேக் மற்றும் நிரூப் மூன்று பேரும் கேங் அமைத்துள்ளனர்.
அவர்கள் மூன்று பேரும் கூட்டு சேர்ந்து கொண்டு மற்றவர்களைப் பற்றி பேசி வருகின்றனர்.
தற்போது வெளியாகி உள்ள இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ் அவர்களை கிண்டலடித்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 5
அக்டோபர் 3ந் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 5, நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

நமீதா வெளியேறினார்
கடந்த வாரத்தில் போட்டியாளர்கள் ஒரு கத சொல்லட்டுமா டாஸ்கில் போட்டியாளர்கள் கடந்து வந்த பாதை குறித்து பேசினார்கள். இதில் திருநங்கை நமீதா பேசியது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து,நமிதா மாரிமுத்து சில தவிர்க்கமுடியாத காரணத்தால் வெளியேறிவிட்டதாக கமல் அறிவித்தார்.

தாமரைச்செல்வி கேப்டன்
இதையடுத்து நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற தாமரைச்செல்வி கேப்டனாக பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து குக்கிங் டீம், வெசல் வாஷிங் டீம், ஹவுஸ் கீப்பிங் டீம் மற்றும் பாத்ரூம் வாஷிங் டீம் என 4 அணிகளாக பிரித்தார்.

கிண்டிலத்த நெட்டிசன்ஸ்
இதையடுத்து, தற்போது பிக் பாஸ் வீட்டின் இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், பிரியங்கா கேங் சேர்த்துக்கொண்டு மற்றவர்களை பற்றி பேசி வருகிறார். இந்த ப்ரோமோவால் கடுப்பான இணையவாசிகள் அவர்களை கிண்டலடித்து வருகின்றனர்.

பிரியங்கா தான் மெயின்
ஒரு இணையவாசி #abishek பிரியங்கா கூட ட்ராவல் பண்ணிட்டு போலாம்னு பிளான் பண்ணிட்டு இருக்கான். ஆனா #Niroop அவனை கழட்டி விட்டுட்டு இவன் பிரியங்கா கூட ட்ராவல் பண்ணலாம்னு இருக்கான் போல, அடேய் இந்த ட்ரியோ கண்டிப்பா செட் ஆகுது, ஆனா #Priyanka மெயின் கேரக்டர் இந்த சீசன்லனு நினைக்குறேன் என்று கருத்து பகிர்ந்துள்ளார்.

அட போங்கடா
கேங்குனு சொன்னதும் கடுப்பான ஒரு நெட்டிஸன், இன்னும் எத்தன சீசன்லடா இதையே பண்ணுவீங்க... ஆவுனா Gang னு பிரிஞ்சிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

குரூப் சேர்ந்தாச்சு
பாஸ்...... பிக் பாஸ் வீட்டில் குரூப் சேர்ந்து வீட்டார்கள் சந்தானத்திடம் கூறுவது போல ஒரு மீம்ஸ் பதிவிட்டு ஆளு ஆளுக்கு அவர்களை கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











