நடிகைக்கு லிப் டூ லிப் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்: சின்மயியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
ஹைதராபாத்:மன்மதுடு 2 படத்தில் ரகுல் ப்ரீத் சிங் சக நடிகைக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்ததை பார்த்த ரசிகர்கள் பாடகி சின்மயியை கிண்டல் செய்கிறார்கள்.
ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் நாகர்ஜுனா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த மன்மதுடு 2 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. நாகர்ஜுனா பிளேபாயாக நடித்துள்ள இந்த படத்தில் காமெடி தான் மொக்கை போட்டுவிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.

நாகர்ஜுனா 59 வயதில் பிளேபாயாக நடித்துள்ளதும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. ரகுல் ப்ரீத் சிங் இந்த படத்தில் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்ததை பார்த்தவர்கள் அவரை விளாசுகிறார்கள்.
படத்தில் ரகுல் நடிகை ஜான்சிக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்களோ பாடகி சின்மயி ஊருக்கே உபதேசம் சொல்கிறார் ஆனால் அவரின் கணவர் ராகுலுக்கு மட்டும் எதுவும் சொல்வது இல்லை போன்று. இதே வேறு யாராவது ஒரு இயக்குநரின் படத்தில் இந்த லிப் டூ லிப் காட்சி வந்திருந்தால் சின்மயி பெண்ணியம் அது, இது என்று கூறி ட்வீட் மேல் ட்வீட் போட்டிருப்பார், கணவரின் படம் என்பதால் சத்தமில்லாமல் இருக்கிறார் என்று விளாசியுள்ளனர்.
மேலும் ரகுல், ஜான்சி முத்தக் காட்சி தான் பெண்ணியத்திற்கு சிறந்த உதாரணம். இந்த விஷயத்தில் நாங்கள் சின்மயியிக்கு ஆதரவாக உள்ளோம் என்று கூறி நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர். நாகர்ஜுனா மகள் வயது பெண்களுக்கு முத்தம் கொடுத்து நெருக்கமாக நடித்துள்ளார். அது படம் என்பது எங்களுக்கும் புரிகிறது. ஆனால் படம் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா?. இது எல்லாம் சின்மயிக்கு கண்ணுக்கே தெரியாதே என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே மன்மதுடு 2 தான் மோசமான படம். எங்க அண்ணன் நாகர்ஜுனாவை விட்டுடுங்க சின்மயி, ராகுல் என்று ரசிகர்கள் ட்வீட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











