அதுக்கு எல்லாம் மூளை வேண்டும்: நடிகையை மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்கள்
மும்பை: பாலிவுட் நடிகை திஷா பதானியை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் மூலம் பிரபலமானவர் திஷா பதானி. சுந்தர் சி. யின் சங்கமித்ரா படத்தின் ஹீரோயின் அவர். அவர் அடிக்கடி தனது புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அப்படி ஒரு வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்களிடம் வசமாக மாட்டிக் கொண்டார்.

வீடியோ
திஷா பதானி செல்போன் பிராண்டு ஒன்றுக்கு விளம்பரம் செய்கிறார். அந்த விளம்பரம் தொடர்பான வீடியோவை விளம்பர நிறுவனம் திஷாவுக்கு இமெயில் மூலம் அனுப்பியது. அவரும் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

திஷா
விளம்பர நிறுவனம் அனுப்பிய இமெயிலில் குறிப்பிட்டிருந்ததை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து சமூக வலைதளத்தில் போட்டுவிட்டார் திஷா பதானி. இதை பார்த்த நெட்டிசன்கள் ஆர்வக் கோளாறுக்கு அளவே இல்லையா. இப்படியா காப்பி பேஸ்ட் செய்வது என்று மரணமாக கிண்டல் செய்தனர்.

நீக்கம்
நெட்டிசன்கள் தன்னை ஏகத்திற்கும் கிண்டல் செய்ததை பார்த்த பிறகே திஷாவுக்கு தான் செய்த தவறு தெரிய வந்தது. இதையடுத்து அவர் அந்த செல்போன் விளம்பரம் குறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கிவிட்டார்.
கலாய்
சமூக வலைதளத்தில் ஏதாவது போஸ்ட் செய்து அவ்வப்போது நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகி வருகிறார் திஷா. முன்னதாக அவர் இந்திய பாரம்பரிய உடை அணிந்து ஜாக்கெட் போடாமல் பிரா மட்டும் போட்ட புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











