Don't Miss!
- News
மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம்.. திருப்பதி தேவஸ்தானத்திடன் ரூ.16 கோடி கேட்கும் ஆந்திர அரசு
- Sports
இதுமட்டும் நடந்திருந்தா என்ன ஆயிருக்கும்??.. உலக சாதனைக்கே வரவிருந்த விணை.. பும்ராவின் அதிர்ஷ்டம்!!
- Finance
'இந்த' துறையில் ரூ.30 கோடி-யா.. அசத்தும் ஈரோடு ஆர்த்தி..!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Automobiles
உங்க போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் அவளோதான்... இதுதான் அதோட அர்த்தமா? இனி கவனமா இருக்கணும்!
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஐக்கி பெர்ரி இடுப்பில் கை போட்ட நிரூப்.. பிரியங்கா பார்த்தா என்னாகும்.. நெட்டிசன்ஸ் கலாய்!
சென்னை: பிக் பாஸ் வீட்டிலேயே நிரூப் மற்றும் ஐக்கி பெர்ரி இணைந்து பொம்மை டாஸ்க் ஆடிய பிறகு தான் பிரியங்காவுக்கும் நிரூப்புக்கும் இடையே மிகப்பெரிய பிரச்சனை உருவானது.
அது கடைசி வரை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஐக்கி பெர்ரி இடுப்பில் கை போட்டு நிரூப் நிற்கும் புகைப்படத்தை ஐக்கி பெர்ரி ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகிறார்.
அதனை பார்த்த நெட்டிசன்கள் ஜாலியாக இருவரையும் சேர்த்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
வழிப்பறி
கொள்ளைக்காரங்க
ஆட்டத்தை
பார்க்க
ரெடியா
...
ஓடிடில
தான்
பார்க்கணும்!

பிக் பாஸ் வீட்டு பார்பி டால்
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்ட தஞ்சாவூரை சேர்ந்த ராப் இசை பாடகி ஐக்கி பெர்ரி கடைசி வரை நிகழ்ச்சியில் தொடர்வார் என ரசிகர்கள் நினைத்த நிலையில், அந்த பொம்மை டாஸ்க்குக்கு பிறகு எவிக்ட் ஆகி வெளியேறினார். கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் பார்பி டால் போல வந்திருந்த அவரை பார்த்து கமல் சாரும் ஜாலியாக தலையில் ஃபேன் இருக்கு என கிண்டல் செய்திருந்தார்.

இடுப்பில் கை
பிக் பாஸ் பிரபலங்கள் அனைவரும் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த நிலையில் ஒருவரை ஒருவர் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், ஐக்கி பெர்ரியை நிரூப் சந்தித்த புகைப்படத்தை ஐக்கி பெர்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் ஐக்கியின் இடுப்பில் நிரூப் கை போட்டு நிற்பதை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

பிரியங்கா பார்வையில்
பிக் பாஸ் 5வது சீசனில் ஆரம்பத்தில் இருந்தே நிரூப் மற்றும் பிரியங்கா ஒரு டீமாக செயல்பட்டு வந்தனர். அபிஷேக் ராஜா பிரியங்காவுடன் பழகுவதை பார்த்து பொறாமைப்பட்ட நிரூப் மீண்டும் அவர் ரீ என்ட்ரி கொடுத்த போதும் கடுப்பானார். அதே சமயம் ஐக்கி உடன் சேர்ந்து பொம்மை டாஸ்க்கில் நிரூப் விளையாடியது பிரியங்காவுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிரியங்கா பார்த்துட போறாங்க என ஐக்கியை எச்சரித்து வருகின்றனர்.

பிரியங்காவை கட்டிப்பிடித்து
அதே சமயம் பிரியங்காவை கட்டிப்பிடித்து ஐக்கி பெர்ரி இருக்கும் புகைப்படத்தையும் அவர் ஷேர் செய்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கட்டிப் பிடிப்பதற்கு எதிரான ஒரு பஞ்சாயத்தே இருவருக்கும் இடையே நடந்த நிலையில், தற்போது பிரியங்காவை இப்படி கட்டிப்பிடித்து நிக்கிறீங்களே என்றும் நெட்டிசன்கள் ஐக்கியிடம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ராஜு மற்றும் சிபியுடன்
மேலும், பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு மற்றும் ரூ. 12 லட்சம் பெட்டியுடன் ஸ்மார்ட்டாக எஸ்கேப் ஆன சிபியுடன் இருக்கும் புதிய புகைப்படத்தையும் ஐக்கி பெர்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களிடம் லைக்குகளை அள்ளி வருகிறார். எல்லோரும் ஒன்றாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் என்ன அடுத்த நிகழ்ச்சியா? என்கிற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.