கொஞ்சம் கேப் விடுங்க காஜல் அகர்வால்.. யோகாலாம் பண்ணி ரெடியாகுறீங்க போல என கலாய்க்கும் ரசிகர்கள்!

சென்னை: தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவை திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால் தற்போது மாலத்தீவில் தனது தேனிலவை கொண்டாடி வருகிறார்.

ஹனிமூனுக்கு சென்ற இடத்திலும், தனது ரசிகர்களுக்காக ஏகப்பட்ட போட்டோக்களை போட்டு, டச்சிலே இருக்கிறார் காஜல் அகர்வால்.

தொடர்ந்து ஹனிமூன் போட்டோக்களாக போட்டுத் தள்ளும் காஜல் அகர்வாலிடம் கொஞ்சம் கேப் விட்டு போடுங்க ஹார்ட் தாங்காது என ரசிகர்கள் செல்லக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

காஜல் அகர்வால் திருமணம்

காஜல் அகர்வால் திருமணம்

மும்பையில் கடந்த அக்டோபர் 30ம் தேதி நடிகை காஜல் அகர்வாலுக்கும் பிரபல தொழிலதிபரான கவுதம் கிட்சிலுவுக்கும் தாஜ் ஹோட்டலில் கோலாகலமாக திருமணம் நடந்தது. கொரோனா காலத்தில் மலர்ந்த காதலை தொடர்ந்து, காஜல் அகர்வால் உடனடியாக தனது திருமணத்தையும் செய்து கொண்டது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

செம வைரல்

செம வைரல்

சமூக வலைதளங்களில் கவுதமை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்கிற அறிவிப்பை தொடர்ந்து, அவரை அறிமுகம் செய்ததில் இருந்து, ஹனிமூன் வரைக்கும் எல்லா போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு செம வைரல் ஆக்கி வருகிறார் நம்ம துப்பாக்கி நடிகை.

மாலத்தீவில் தேனிலவு

மாலத்தீவில் தேனிலவு

லாக்டவுன் தளர்வுகள் ஏற்பட்டுள்ள நிலையில், மாலத்தீவுக்கு தனது கணவர் கவுதமுடன் இன்ப தேனிலவுக்கு சென்றுள்ளார் நடிகை காஜல் அகர்வால். அங்கே கணவருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும், தனியாக ஏகப்பட்ட கவர்ச்சி போஸ்களை கொடுத்து தனது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறார் காஜல்.

கடலுக்கு நடுவே ரெசார்ட்டில்

கடலுக்கு நடுவே ரெசார்ட்டில்

கடலுக்கு நடுவே உள்ள ரெசார்ட்டில் தனது ஹனிமூனை கொண்டாடி வரும் காஜல் அகர்வால், அதன் புகைப்படங்களை ரசிகர்களுக்காக பகிர்ந்து எல்லாரையும் ஜாலி மூடுக்கு மாற்றி உள்ளார். திருமண வாழ்க்கை அமோகமாக என்ஜாய் பண்ணுங்க என ஏகப்பட்ட பிரபலங்களும் ரசிகர்களும் காஜலுக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

யோகாலாம் பண்ணி ரெடியாகுறீங்க போல

யோகாலாம் பண்ணி ரெடியாகுறீங்க போல

ஸ்கூல் யூனிபார்ம் போல நீல செக்கர்ட் டிரெஸ் போட்டுக் கொண்டு இருக்கும் போதும், யோகாவை விடாமல் கடலை பார்த்தவாறு ரெசார்ட்டில் யோகா செய்யும் போட்டோவையும் போட்ட காஜல் அகர்வாலை பார்த்து ரசிகர்கள், யோகாலாம் பண்ணி ரெடியாகுறீங்க போல என நல்லாவே ஓட்டி வருகின்றனர்.

கொஞ்சம் கேப் விடுங்க

கொஞ்சம் கேப் விடுங்க

35 வயதாகும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். இந்தியன் 2, ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பாரீஸ் பாரீஸ் படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்றும் ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில், ஜாலியா தேனிலவை கொண்டாடி கொண்டிருக்கும் காஜல் அகர்வாலின் கொள்ளை அழகை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் கேப் விட்டு போடுங்க.. சின்ன ஹார்ட் தாங்கல என அன்பு கோரிக்கையும் விடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X