90 நாள் ஆகிடுச்சு ஆண்டவரே.. இப்போ போய் தனித்து விளையாட சொல்றீங்களே.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோ வெளியாகி உள்ளது.

புது வித முயற்சியாக இந்த சீசன் இருக்கும் என நினைத்து இதுபோன்ற போட்டியாளர்களை களமிறக்கிய நிலையில், ஒட்டுமொத்த பிக் பாஸ் தமிழ் டிஆர்பி ரேட்டிங்கையும் எந்தளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கீழே இறக்கி விட்டனர்.

இந்த சீசனின் அற்புதம் என்னவென்றால் ஒவ்வொரு வரும் தனி தனியாக விளையாடுகிறார்கள் என சில வாரத்திற்கு முன்னதாக பாராட்டிய அதே கமல் சார் இப்போ தனித்து விளையாடுங்கள் என காலம் போன கடைசியில் கெஞ்சுவது வேடிக்கையாக இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மூன்றாவது புரமோ

மூன்றாவது புரமோ

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 90 நாட்களை தொட்டு விட்டது. அதன் மூன்றாவது புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இரண்டாவது புரமோவில் ஆரம்பித்த தாமரை, பிரியங்கா ரோஸ்ட்டின் தொடர்ச்சியே இந்த மூன்றாவது புரமோவிலும் அரங்கேறி உள்ளது.

பிரியங்கா ஃபோபியா

பிரியங்கா ஃபோபியா

பிக் பாஸ் ஹவுஸ்மேட்கள் அனைவரும் கங்கணம் கட்டிக் கொண்டு தன்னை வெளியேற்ற திட்டமிட்டு விட்டனர் என நினைத்த நிரூப் இந்த வாரம் முழுவதும் தாமரையை கன்வின்ஸ் பண்ண முயற்சித்தார். இந்நிலையில், முதல் நபராக உங்களை அனைவரும் திட்டமிட்டு வெளியே அனுப்பினார்களா? என கேட்டதற்கு பிரியங்கா தான் சார் காரணம் என நிரூப் சொன்னதை பார்த்த ரசிகர்கள் நிரூப்புக்கு பிரியங்கா ஃபோபியா இன்னும் போகல போல என கலாய்த்து வருகின்றனர்.

ஸ்கூல் பசங்க மாதிரி

ஸ்கூல் பசங்க மாதிரி

ராஜு கேம் ஆடியது பற்றி பாவனி பேசும் போது அழகாக அதனை கட் செய்து விட்ட பிக் பாஸ் எடிட்டர் தாமரை பாவனியின் கையை பிடித்து ராஜு உட்கார வைத்த போது அமீர் ஏன் முட்டையை உடைக்கவில்லை என கேள்வி எழுப்ப நீங்க ஏன் உடைக்கல என பதிலுக்கு அமீர் கேள்வி எழுப்பி ஒட்டுமொத்தமாக அனைவரும் ஸ்கூல் பசங்க மாதிரி கமலையும் மதிக்காமல் சண்டை போட ஆரம்பித்து விட்டனர்.

தனித்து விளையாடுங்கள்

தனித்து விளையாடுங்கள்

மீன் மார்க்கெட் போல ஹவுஸ்மேட்ஸ் சண்டை போட்டுக் கொள்ள அதை பார்த்து கடுப்பான கமல் தனித்து விளையாடுங்கள் என கடுப்படித்து விடும் புரமோ தற்போது வெளியாகி உள்ளது. 90வது நாளில் வந்து இந்த அறிவுரையை சொல்றீங்களே ஆண்டவரே என கமலையே ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

அப்போ அப்படி சொன்னாரே

அப்போ அப்படி சொன்னாரே

இந்த சீசனில் இருக்கும் பியூட்டி என்னவென்றால் யாரும் குரூபிசம் பண்ணாமல் தனித்து விளையாடுறாங்க என சமீபத்தில் தான் கமல் பாராட்டி இருந்தார். ஆனால், தற்போது கமல் தனித்து விளையாடுங்கள் என்று சொல்லும் நிலைமைக்கு வந்து விட்டாரே என ரசிகர்கள் அனுதாபப்பட்டு வருகின்றனர்.

அடுத்த சீசனுக்கு வருவாரா கமல்

அடுத்த சீசனுக்கு வருவாரா கமல்

பிக் பாஸ் நிகழ்ச்சி டிஆர்பி ரேட்டிங்கும் குறைந்து விட்ட நிலையில், மக்கள் மத்தியிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பான நம்பிக்கை பெரிதும் குறைந்து வருகிறது. மேலும், உலக நாயகனையும் நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ள நிலையில், அடுத்த சீசனை கமல் தொகுத்து வழங்குவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X