உங்களுக்கு பைத்தியமா, எந்த நடிகையாவது இப்படி செய்வாரா?: நெட்டிசன்கள் கலாய்
மும்பை: தலைமுடியை வெட்டிய நடிகை கியாரா அத்வானியை நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.
பாலிவுட் நடிகை கியாரா அத்வானி அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபிர் சிங் படத்தில் நடித்து முடித்துள்ளார். அக்ஷய் குமாரை வைத்து ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா இந்தி ரீமேக்கில் கியாரா நடிக்கிறார்.
இந்நிலையில் அவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கியாரா
படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதால் தலைமுடியை பராமரிக்க முடியவில்லை என்று கூறி கியாரா தனது முடியை நறுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
விளம்பரம்
எந்த நடிகையும் உங்களை போன்று இப்படி முடி வெட்ட மாட்டார். இது எல்லாம் விளம்பரம் தேடுவதற்காக செய்யப்படுவது. புதுப்படத்திற்காக முடியை நறுக்கியிருப்பீர்கள். நல்ல நடிப்பு என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்கிறார்கள்.
நடிப்பு
கியாரா அத்வானியின் வீடியோவை பார்த்தவர்கள் ஒன்று அவருக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும் இல்லை என்றால் நடிக்கிறார் என்று தெரிவித்துள்ளனர்.

முடி
எனக்கு தலைமுடி நீளமாக வளர்க்க பிடிக்கும். ஆனால் வேலையின் காரணமாக பராமரிக்க முடியவில்லை. அதனால் தான் நானே கத்தரிக்கோலை எடுத்து முடியை வெட்டிவிட்டேன் என்று கியாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் அவர் பேச்சை நம்ப நெட்டிசன்கள் தயாராக இல்லை.


Click it and Unblock the Notifications











