பாக்கியலட்சுமி சீரியலை காப்பி அடித்தாரா மணிரத்னம்.. தக் லைஃப் டிரைலரை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், சிம்பு இணைந்து நடித்து இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. டிரைலரை பிரபலங்கள் கொண்டாடி வரும் நிலையில், சில வில்லங்கமான இணையவாசிகள், இயக்குநர் மணிரத்னம், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலை, காப்பி அடித்து படமாக எடுத்துவிட்டார் என இணையத்தில் மீம்ஸ்களை போட்டு கிண்டலடித்து வருகின்றன்ர.
நாயகன் திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு பின் மணிரத்னம், கமல்ஹாசன் இருவரும் 'தக் லைஃப்' படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், அபிராமி, வடிவுக்கரசி, அலி ஃபைசல், சானியா மல்ஹோத்ரா என பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என மூன்று நிறுவனமும் இணைந்து படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இசைவெளியீட்டு விழா மே 16ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்தியா - பாகிஸ்தான் சண்டை காரணமாக தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து, மே 24 ஆம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

அனல் பறக்கும் வசனம்: நேற்று படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இதில், நீ என் உயிர காப்பாத்துனவன், எமன் கிட்ட இருந்து மீட்டெடுத்தவன், உன் தலையெழுத்தையும், என் தலையெழுத்தையும் ஒன்னா எழுதி வெச்சிட்டான்.. இனிமே நீயும் நானும் ஒன்னு... கடைசி வரைக்கும்.. என கமல் உரையாடலுடன் டிரைலர் தொடங்குகிறது. அதன் பின் இது எமனுக்கும், எனக்கும் நடக்குற கதை... என அனல் பறக்கும் வசனங்களும், அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. மேலும், சிம்பு, நாசர், அபிராமி, நாசர், த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரின் காட்சிகளும் வந்து செல்கிறது. இதில், கமல், அபிராமியை கட்டிபிடித்தபடி உதட்டில் முத்தம் கொடுக்கும் காட்சியும், த்ரிஷாவுடன் நெருக்கமாக இருக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்த டிரைலரைப் பார்த்த பிரபலங்கள் பலர், டிரைலர் ரொம்ப பிரமாதமா இருக்கு, நாயகன் படத்தையே பார்த்த மாதிரி இருக்கும் என்றும், கமலுக்கு எவ்வளவு தான் வயசானாலும் அந்த லிப் கிஸ்ஸை விட மாட்டாரு போல என பலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

காப்பி அடித்தாரா: தக் லைஃப் டிரைலரைப் பார்த்த சில விஷமிகள், இயக்குநர் மணிரத்னம், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலை, காப்பி அடித்து படமாக எடுத்துவிட்டாரா என்றும், அந்த சீரியலில் தான் கோபி, மனைவி பாக்யாவிற்கு தெரியாமல் ராதிகாவுடன் தொடர்பில் இருப்பார். அந்த கதை போல, கமலும் அபிராமிக்கு தெரியாமல் த்ரிஷாவின் தொடர்பில் இருக்கிறார் என, இணையத்தில் மீம்ஸ்களை போட்டு கிண்டலடித்து வருகின்றனர். இதைப்பார்த்த கமல்ஹாசனின் தீவிர ரசிகர்கள், என்ன கொடுமை சார் இது என கேட்டு வருகின்றனர். பான் இந்திய திரைப்படமாக உருவாகி உள்ள இப்படம், ஜூன் 5ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











