தம்பி வயசுக்காரரையா திருமணம் செய்வது: நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்
Recommended Video

மும்பை: தன்னை விட வயதில் சிறியவரை திருமணம் செய்த நடிகை நேஹா தூபியாவை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
பாலிவுட் நடிகை சோனம் கபூரின் திருமணம் பற்றியே அனைவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில் நடிகையும், மாடலுமான நேஹா தூபியா தனது காதலரான நடிகர் அங்கத் பேடியை சத்தமில்லாமல் திருமணம் செய்து கொண்டார்.
அவர்களின் திருமணம் சீக்கிய முறைப்படி நடந்தது.

நேஹா
நேஹா தூபியா தன்னைவிட 2 வயது சிறியவரான அங்கத் பேடியை திருமணம் செய்துள்ளார். பாலிவுட் நடிகைகள் தங்களை விட சிறியவரை திருமணம் செய்வது ஒன்றும் புதிது அல்ல.

நெட்டிசன்ஸ்
ஏம்மா நேஹா தம்பி வயது அங்கத்தை போய் திருமணம் செய்துள்ளீர்கள். அவர் தம்பிமா என்று நேஹாவை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

அறிவுரை
அங்கத் பேடி தம்பி போன்றவர் அவருக்கு ராக்கி கட்டுங்கள் என்று நெட்டிசன் ஒருவர் கமெண்ட் போட்டிருந்தார். அதை பார்த்த நேஹா டென்ஷன் ஆகாமல் பதில் அளித்துள்ளார்.

நன்றி
தன்னை கலாய்த்தவருக்கு போட்ட கமெண்ட்டில் நேஹா கூறியிருப்பதாவது, அறிவுரைக்கு நன்றி நண்பரே. போய் ஏதாவது வேலை இருந்தால் பாருங்க என்று தெரிவித்துள்ளார்.
நண்பர்
தன் நெருங்கிய நண்பரை திருமணம் செய்தது தான் தன் வாழ்வில் எடுத்த சிறந்த முடிவு என்று தெரிவித்துள்ளார் நேஹா தூபியா.


Click it and Unblock the Notifications











