டாய்லெட் பேப்பரை இப்படியும் பயன்படுத்தலாமோ?: ப்ரியங்கா கணவரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
நியூயார்க்: பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவை மட்டும் அல்ல அவரின் கணவர் நிக் ஜோனஸையும் நெட்டிசன்கள் சும்மாவிடவில்லை.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த எம்.இ.டி. காலா நிகழ்ச்சிக்கு பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா அணிந்து சென்ற உடையை பார்த்து அனைவரும் அவரை கலாய்த்தனர்.

திடீர் என்று பார்த்தால் யோகிபாபுவுக்கு அக்கா போன்று இருக்கிறார் என்று தமிழ் ரசிகர்கள் சிரித்தார்கள்.
இந்நிலையில் நெட்டிசன்களின் கவனம் ப்ரியங்காவின் கணவரும், பாடகருமான நிக் ஜோனஸ் பக்கம் திரும்பியுள்ளது. நிக் கோட், சூட்டில் நன்றாகத் தானே இருந்தார் என்று நினைக்கலாம். அவர் ஷால் போன்ற ஒன்றை அணிந்திருந்தார் அல்லவா அதை தான் கிண்டல் செய்கிறார்கள். டாய்லெட் பேப்பரை சுற்றிக் கொண்டு வந்து ஃபேஷன் என்கிறார் நிக் என கலாய்த்துள்ளனர்.
பாவம்யா, அவசரத்துக்கு பாத்ரூமுக்கு சென்றிருப்பார், வரும்போது மறந்து பேப்பரை எடுத்து வந்துவிட்டார். கூட்டத்தில் போட இடம் இல்லாததால் அதையே ஷால் போன்று ஸ்டைலாக சுத்தி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துவிட்டார் என்று கண்டபடி கிண்டல் செய்கிறார்கள்.
இதற்கு முன்பு இதே விழாவில் காக்கி நிற உடை அணிந்து வந்து அனைவரின் கேலி, கிண்டலுக்கு ஆளானார் ப்ரியங்கா சோப்ரா. தற்போது அவரின் கணவரையும் கலாய்க்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











