பொண்டாட்டின்னாலும் அங்கயா கை வைப்பது?: ப்ரியங்கா கணவரை விளாசிய நெட்டிசன்ஸ்
Recommended Video
மும்பை: ப்ரியங்கா சோப்ராவின் பின்புறத்தில் அவரின் கணவர் கை வைத்திருக்கும் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்துள்ளனர்.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவும், அவரின் கணவர் நிக் ஜோனஸும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் கேன்ஸ் பார்ட்டிகளுக்கும் ஜோடியாக செல்கிறார்கள்.

அதில் ஒரு பார்ட்டிக்கு ப்ரியங்கா அணிந்த உடையை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்துவிட்டனர். அந்த அளவுக்கு குறைச்சலாக இருந்தது. கேன்ஸ் பார்ட்டி ஒன்றில் எடுத்த புகைப்படத்தை நிக் ஜோனஸ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
அந்த புகைப்படத்தில் நிக் தனது மனைவியின் பின்புறத்தில் கையை வைத்து நெருக்கமாக போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த நெட்டிசன்களோ, என்ன தான் புருஷன், பொண்டாட்டியாக இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர், வீட்டில் வைத்துக் கொள்ளலாமே என்று தெரிவித்துள்ளனர்.
ப்ரியங்காவின் தங்கையும் பாலிவுட் நடிகையுமான பரினீத்தி தனது அத்திம்பேரை வம்பிழுத்து கமெண்ட் போட்டுள்ளார். ஓ மை காட், யார் இந்த பையன். அவன் நோக்கம் என்ன என்று கூறி கலாய்த்துள்ளார்.
தன் அக்கா ப்ரியங்காவுக்கு ஏற்ற கணவர் நிக் தான் என்கிறார் பரினீத்தி சோப்ரா.


Click it and Unblock the Notifications











