தெரியாமல் உளறிய பிரபாஸ்: கண்டமேனிக்கு கலாய்த்த நெட்டிசன்கள்
Recommended Video
கொச்சி: கேரளாவில் நடந்த சாஹோ பட விழாவில் பிரபாஸ் பேசியதை பார்த்த சமூக வலைதளவாசிகள் அவரை கிண்டல் செய்துள்ளனர்.
பாகுபலி 2 படத்தை அடுத்து சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படம் வரும் 30ம் தேதி ரிலீஸாகிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் சாஹோ ரிலீஸாக உள்ளது.
ஹாலிவுட் தரத்தில் சண்டை காட்சிகள் இந்த படத்தில் உள்ளதாம். அதனாலேயே படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

சாஹோ
பிரபாஸ் கேரள மாநிலம் கொச்சியில் நடந்த சாஹோ பட விழாவில் கலந்து கொண்டு பேசினார். அந்த நிகழ்ச்சியில் மலையாள நடிகர்கள் மோகன்லால், சித்திக், நடிகை மம்தா மோகன்தாஸ், இயக்குநர் பி. உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த மலையாள திரையுலக பிரபலங்கள் ஒவ்வொருவரையும் புகழ்ந்து பேசினார் பிரபாஸ்.

நடிகர்
பிரபாஸ் நடிகர் சித்திக்கை பல ஹிட் படங்கள் கொடுத்த இயக்குநர் சித்திக் என்று தவறாக நினைத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்காக இயக்குநர் சித்திக்கிற்கு நன்றி என்றார் பிரபாஸ். சித்திக் பெரிய இயக்குநர், பல வெற்றிப் படங்களை இயக்கியவர் என்று பேசினார் பிரபாஸ்.

பிரபாஸ்
நடிகர் சித்திக்கிற்கும், இயக்குநர் சித்திக்கிற்கும் கூட வித்தியாசம் தெரியாதா என்று கேட்டு நெட்டிசன்கள் பிரபாஸை அநியாயத்திற்கு கலாய்த்துவிட்டனர். ஒரு நிகழ்ச்சிக்கு வரும்போது அங்கு வரும் பிரபலங்களின் விபரங்களை தெரிந்து கொண்டு வர வேண்டாமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ரசிகர்கள்
என்ன சார், பெரிய நடிகராக உள்ளீர்கள். உங்கள் துறையை சேர்ந்த பிரபலம் பற்றி கூட தெரியவில்லையே என்று நெட்டிசன்கள் பிரபாஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வரும் பிரபாஸுக்கு எப்படி சித்திக் யார் என்று தெரியும். ஏதோ தெரியாமல் உளறிவிட்டார், அதை போய் பெரிதுபடுத்தி கிண்டல் செய்வது சரி அல்ல என்று அவரின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். பிரபாஸ் சாஹோ படத்தை விளம்பரம் செய்யப் போகும் இடங்களில் எல்லாம் அனுஷ்காவை பற்றி கேட்கிறார்கள். அவரும் பொறுமையுடன் பதில் அளித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











