Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆர்.எஸ்.எஸ். பிராண்டு அம்பாசிடர்: நடிகையை பார்த்து சிரிப்பாய் சிரிக்கும் நெட்டிசன்ஸ்
மும்பை: காக்கி ஷார்ட்ஸ் அணிந்த பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவை நெட்டிசன்கள் கிண்டல் செய்கிறார்கள்.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸுடன் வெளியே சென்றுள்ளார். அப்பொழுது அவர் காக்கி ஷார்டஸ், கருப்பு நிற சட்டை, கோட் அணிந்து சென்றார்.
அவரின் காக்கி நிற ஷார்ட்ஸை பார்த்த நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து மீம்ஸ் போடத் துவங்கிவிட்டனர்.
இஸ்லாமியரை காதலிப்பதால் ரித்திக் ரோஷன் சகோதரியை அடிக்கிறார்கள்: பரபரப்பு புகார்
|
ப்ரியங்கா
ப்ரியங்கா சோப்ரா காக்கி டிரவுசர் அணிந்திருப்பதால் அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்துவிட்டதாக கூறி கிண்டல் செய்கிறார்கள். இந்நிலையில் ப்ரியங்கா பிரதமர் நரேந்திர மோடியை முன்பு வெளிநாட்டில் சந்தித்து பேசியபோது எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
|
கிண்டல்
காக்கி டிரவுசர் அணிந்த ப்ரியங்கா சோப்ரா ஆர்.எஸ். எஸ். அமைப்பின் பிராண்டு அம்பாசிடராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள். வர வர ப்ரியங்கா சோப்ரா தனது உடைகளுக்காக தான் அதிகமாக கலாய்க்கப்படுகிறார். அதிலும் குறிப்பாக அவர் ஏதாவது விழாக்களுக்கு வித்தியாசமாக உடை அணிந்து சென்றால் அந்த நாள் முழுவதும் அவரை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கிறார்கள்.
|
மீம்ஸ்
ப்ரியங்கா சோப்ரா ஆர்.எஸ். எஸ். அமைப்பின் முக்கிய கூட்டத்தில் கலந்து கொள்ளத் தான் காக்கி டிரவுசர் அணிந்ததாகக் கூறி நெட்டிசன்கள் சிரிக்கிறார்கள். அவருக்கு பிடித்திருக்கு அணிகிறார், அதை ஏன்பா இப்படி கலாய்க்கிறீர்கள். ப்ரியங்கா சோப்ரா என்றால் தொக்காப் போச்சா என்று அவரின் தீவிர ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
|
நிக் ஜோனஸ்
அது என்னமோ காக்கியை பார்த்தாலே ஆர்.எஸ். எஸ். நினைவு தான் வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த டிரவுசரை பார்த்தால் அந்த காக்கிகள் போன்றே உள்ளது. அதனால் தான் கலாய்க்கிறோம் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளார்கள். எது எப்படியோ, வாரத்தில் ஒரு முறையாவது ப்ரியங்கா சோப்ராவை அவரின் உடைகளுக்காக கலாய்க்காவிட்டால் நெட்டிசன்களுக்கு தூக்கம் வராது போன்று. ப்ரியங்காவின் கணவர் நிக் ஜோனஸ் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களை வைத்தும் மீம்ஸ் போடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.