Fire Rachitha: பிகினி போட்டு கல்யாணம் செய்யலாமா? வாய் கிழிய பேசிய ரச்சிதாவை விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்‌ஷி அகர்வால், சுரேஷ் தாத்தா ஆகியோர் நடித்த திரைப்படம் ஃபயர். ஜேஎஸ்கே சதீஷ் குமார் இயக்கிய இந்த படம் கடந்த வாரம் வெளியாகி மக்களிடம் பாராட்டை பெற்றது. இந்த படத்தில் ரச்சிதா படுக்கை அறை காட்சியில் அதீத கவர்ச்சி காட்டி நடித்திருந்தது பெரும் புயலை கிளப்பிய நிலையில், ஆபாசம் பற்றி அவர் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இதில், சினிமாவில் ஆபாசத்தை காட்டி தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கமில்லை, அப்படி இருந்தால் அது தப்பான நோக்கமாகிவிடும். அண்மையில் சோசியல் மீடியாவில் திருமணத்தின் போது ஒரு பெண், என் ஆடை, என் சுதந்திரம் என பிகினி அணிந்து கொண்டு கல்யாண மேடையில் இருந்தார். இதை பார்த்து நான், அதிர்ச்சி அடைந்தேன். என்னுடைய ஆடை, என்னுடைய உரிமை என்று நாம் எவ்வளவுதான் சொன்னாலும், பிகினியில் தாலி கட்டிக்கொள்வேன் என்று சொல்வதெல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

Rachitha Mahalakshmi fire

அந்த பெண் பிகினி அணிந்து கொள்வதால், அது அந்த பெண்ணுக்கு பாதிப்பு இல்லை, அந்தப் பெண்ணை பிகினியில் பார்த்துவிட்டு, அதே நோக்கத்தோடு மற்ற பெண்களை பார்க்கும் போது தான், அது தவறாகி விடுகிறது. இந்த கருத்தைத்தான் ஒரு படத்தில் நாங்கள் விழிப்புணர்வுக்காகவே வைத்திருந்தோம். இதை பார்த்தவுடன் மற்றவர்கள் திருந்தி விடுவார்கள் என்பது இல்லை. இதன் மூலம் ஒரு சமூக விழிப்புணர்வை ஏற்ற பார்க்கிறோம் என்று பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில் இதைப்பார்த்த இணையவாசிகள், ஃபயர் படத்தில் நீங்க படுக்கை அறை காட்சியில் ஆபாசமாக நடித்ததை பார்த்து ஆண்களின் மனம் சஞ்சலப்படாதா? என்றும், நீங்க எல்லாம் விழிப்புணர்வு பற்றியும் கருத்து சொல்ல வந்துட்டீங்க என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஃபயர் படத்தின் கதை: காதல் தினத்தில் வெளியான ஃபயர் படத்தில் பாலாஜி, பிசியோதெரபி என்ற பெயரில் பெண்களை வசப்படுத்தி ஏமாற்றி அவர்களுடன் நெருங்கி பழகி, அவர்களை படுக்கையில் வேட்டையாடிவிட்டு, அதை வீடியோவாக எடுத்துவைத்து மிரட்டுகிறான். பாலாஜி முருகதாஸின் சூழ்ச்சியை புரியாமல் பல பெண்கள் அவரிடம் சிக்கி கொண்டு பணத்தை இழக்கின்றனர். திடீரென ஒருநாள் பாலாஜி காணாமல் போகிறார். அவரை தேடும் போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிறது. அது என்ன என்பது தான் ஃபயர் படத்தின் கதை. பிப்ரவரி 14ந் தேதி வெளியான இந்த படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X