சிவகார்த்திகேயனை காப்பி அடிக்கும் ராஜு ஜெயமோகன்... வச்சு செய்யும் நெட்டிசன்கள்
சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த மூன்று நாட்களாக துவங்கி நடந்து வருகிறது. இதில் போட்டியாளர்களாக 18 பேர் கலந்து கொண்டுள்ளனர். ஆரம்பமே கலகலப்பு, கிண்டல், கேலி, சென்டிமென்ட், அழுகை என போய்க் கொண்டிருக்கிறது.
உரசல்கள் ஆரம்பித்தாலும், முந்தைய சீசன்களை போல் இல்லாமல் கலகலப்பாக செல்வதால் ரசிகர்கள் பலரும் பிக்பாஸை விரும்பி பார்க்க துவங்கி விட்டனர். இதில் முதல் நாளில் இருந்தே அனைவரையும் சிரிக்க வைத்து வரும் ராஜு ஜெயமோகன், ஹவுஸ்மேட்கள் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

சீரியல் பிரபலம்
நாம் இருவர் நமக்கு இருவர், பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ஏற்கனவே சின்னத்திரை ரசிகர்களுக்கு பழக்கமானவர் ராஜு ஜெயமோகன். இவர் கவின் நடித்த நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்திலும் நடித்துள்ளார். மிமிக்ரி செய்து பலரையும் கவரும் ராஜு ஜெயமோகன், 12 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார்.

நேற்று பாராட்டிய நெட்டிசன்கள்
இந்த தகவலை அறிந்து பிரமிப்புடன் ராஜுவை பலரும் வியப்புடன் பாராட்டி வந்தனர். சின்னத்திரையில் காமெடியனாக இருந்து வரும் ராஜு, நிஜ வாழ்க்கையில் காதல் மன்னனாக இருந்துள்ளாரே என பலரும் பாராட்டி உள்ளனர். அதே சமயம் பிக்பாஸ் வீட்டிற்குள் ராஜுவின் செயல்பாடு சிவகார்த்திகேயனை அப்பட்டமாக காப்பி எடுக்கிறாரே என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

சிவகார்த்திகேயனை காப்பி
நான் யார் என்பதை அனைவருக்கும் தெரிய வைக்க, பிக்பாஸ் வீட்டில் நான் நானாக இருக்க போகிறேன் என சொல்லி விட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ராஜு ஜெயமோகன், உடல் மொழி, செய்கை, ரியாக்ஷன் காட்டுவது என அப்படியே அப்பட்டமாக சிவகார்த்திகேயனை காப்பி அடிக்கிறாரே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எப்போ உங்க முகத்தை காட்டுவீங்க
மூன்று நாட்களாக சிவகார்த்திகேயன் போலவே கை அசைப்பது, பேசுவது என செய்து வருகிறீர்களே, உங்களின் ஒரிஜினல் முகத்தை எப்போது காட்ட போகிறீர்கள் என பலரும் கேட்க துவங்கி விட்டனர். இன்னும் சிலர், நீங்க கவின் மற்றும் சிவகார்த்திகேயன் ஃபிரண்ட் என எங்களுக்கு தெரியும். அதற்காக பேசுவதில் இருந்து அனைத்தையும் அவர்களை போலவேவா செய்வீர்கள். ராஜு ஜெயமோகனாக எப்போது நடந்து கொள்வீர்கள் என கேட்டுள்ளனர்.

குவியும் லைக்குகள்
நெட்டிசன்களின் இந்த கமெண்ட்களை பலரும் லைக் செய்தும், ஷேர் செய்தும் வருகிறார்கள். டிவியில் பார்க்கும் எங்களுக்கே தெளிவாக தெரிகிறது அவர் சிவகார்த்திகேயனை காப்பி அடித்து செய்கிறார் என்று. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒருவருக்கு கூடவா இது இதுவரை தெரியவில்லை என்ற பதிவு லைக்குகளை அள்ளி வருகிறது.


Click it and Unblock the Notifications











