என்னங்கடா குள்ளநரிக்கு கோழி வேஷம் கொடுத்துருக்கீங்க.. ரம்யாவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: என்னங்கடா குள்ளநரிக்கு கோழி வேஷம் கொடுத்துருக்கீங்க என ரம்யா பாண்டியனை பங்கமாக கலாய்த்து வருகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள்.
சாஃப்ட் ஹர்ட், பீடியாட்ரிஷன், விஷ பாட்டில், சைலன்ட் கில்லர் என ஏகப்பட்ட பட்டப்பெயர்களை இந்த சீசனில் கொண்டிருந்தாலும், சிரித்து சிரித்தே தனது காரியங்களை சாதித்து வருகிறார் ரம்யா பாண்டியன்.
இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் நரி ரோல் கொடுக்க வேண்டிய ரம்யாவுக்கு யாருடா கோழி ரோல் கொடுத்தது என நெட்டிசன்கள் பங்கம் செய்து வருகின்றனர்.

ஜோக்கர் நாயகி
2015ம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு எனும் படத்தில் அறிமுகமானாலும், 2016ல் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார் ரம்யா பாண்டியன். டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை என சில படங்களிலேயே இவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும், பெரிய அளவில் பிரபலமாகவில்லை.

இடுப்பு மடிப்பு
என்னடா இத்தனை படங்கள் நடிக்கிறோம், நம்மள யாருமே கண்டுக்க மாட்றாங்க, பெருசா எதுவுமே வாய்ப்பு வரலையேன்னு நினைச்சிட்டு இருக்கிறப்போ, ரம்யா பாண்டியன் எடுத்த அந்த இடுப்பு மடிப்பு போட்டோஷூட் அவரை இந்திய அளவில் டிரெண்டாக்கியது. இளைஞர்களின் இன்ஸ்டன்ட் கனவுக்கன்னியாக ஓவர் நைட்டில் மாறினார் ரம்யா.

பிளேபாய் போட்டோகிராஃபர்
இடுப்பு மடிப்பு போட்டோஷூட் வைரலான நிலையில், பிரபல பிளேபாய் போட்டோகிராஃபர் எல். ராமசந்திரனை வைத்து ரம்யா பாண்டியன் எடுத்த செம ஹாட் போட்டோஷூட்டும் வைரலாக, ஏகப்பட்ட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. வெப்சீரிஸ், விஜய் டிவியின் குக் வித் கோமாளி என கலக்கினார் ரம்யா பாண்டியன்.

பிக் பாஸ் போட்டியாளர்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாகவே ரம்யா பாண்டியன் மாறிவிட்டார். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஹாட் போட்டியாளராக ரம்யா பாண்டியன் என்ட்ரியானார். ரம்யா பாண்டியன் தனது பியூட்டியை வைத்து விளையாடாமல் மைண்ட் வைத்து விளையாடி ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

நிக் நேம்
ரம்யா பாண்டியனுக்கு உலகநாயகன் கமல்ஹாசன், பீடியாட்ரிஷன், குழந்தைகளுக்கு சிரிப்புக் காட்டிக் கொண்டே ஊசி போட்டு விட்டுவிடுவார் என்கிற பட்டப்பெயரை சூட்டினார். அதன் பின்னர், சாஃப்ட் ஹர்ட், சைலன்ட் கில்லர், விஷ பாட்டில் என ஏகப்பட்ட நிக் நேம்கள் ரம்யா பாண்டியனுக்கு குவிந்து வருகிறது.

குள்ளநரிக்கு கோழி வேஷம்
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் புரமோவை பார்த்த நெட்டிசன்கள், "என்னங்கடா.. குள்ளநரிக்கு கோழி வேஷம் கொடுத்துருக்கீங்க" என ரம்யா பாண்டியனை பங்கமாக ட்ரோல் பண்ணி வைரலாக்கி உள்ளனர். அந்த புகைப்படத்தில் ரம்யா பாண்டியன் கையில் அதிக பணத்தையும் அவர் தான் வைத்துள்ளார்.

நிஷா வெளியேறும்போது
கடந்த வாரம் நிஷா வெளியேறும் போது அர்ச்சனா அப்படி அழுது கொண்டிருந்தார். அந்த நேரத்தில், ஜாப் டன் என்பது போல பாலாவை பார்த்து சிரித்த ரம்யா பாண்டியனின் ரியாக்ஷன்களை க்ளோஸ் அப் செய்து வீடியோக்களாக போட்டும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

டைட்டில் வின்னர்
முதல் வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டின் கேப்டனான ரம்யா பாண்டியன், இந்த வாரத்தில் பாலாவுடன் போட்டிப் போட்டு வின் பண்ணி கேப்டனாகி உள்ளார். அதிகமாக யாருடனும் சண்டை போட்டு கத்தாமல், சரியான கேமை ஆடி வரும் ரம்யா பாண்டியனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். பிக் பாஸ் தமிழ் 4 டைட்டிலை தட்டிச் செல்லும் வாய்ப்பும் அவருக்கு அதிகமாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications











