டோட்டல் டேமேஜ்.. அன்பு கேங்கின் ஆட்டம் காலி.. இதற்குத்தான் ஆசைப்பட்டாயா அர்ச்சனா.. ரசிகர்கள் கலாய்!
சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோவை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள், அர்ச்சனாவின் அன்பு கேங் டோட்டல் டேமேஜ் என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
6 பேர் கொண்ட குரூப்பாக விளையாடி வந்த அன்பு கேங்கில் இந்த வாரம் ஜித்தன் ரமேஷுக்கும், நிஷாவுக்கும் குட் பை சொல்லிட்டாங்க..
இனி அர்ச்சனா கேங்கில் ரியோ, கேபி மற்றும் சோம் இணைந்து விளையாடுவார்களா? இல்லை அடுத்த வாரம் கூட்டணி உடைந்து ரகளை நடக்குமா என்பதை பார்ப்போம்.

குரூபிசம் எவிடன்ஸ்
"வாரம் பூரா ஆரி, அனிதா மற்றும் பாலா ஸ்கெட்ச் மட்டுமே போட்டாங்க.. ஆனால், நீங்களே தானா சிக்கிட்டீங்க.. இதுவரை குரூபிசம்க்கு இல்லாத எவிடன்ஸ இந்த வாரம் அள்ளி அள்ளி கொடுத்திட்டீங்க.. ஓடவும் முடியாது ஓழியவும் முடியாது.. அடிக்க வர்றீகளோ? அனிதாவை" என இந்த நெட்டிசன் வெளுத்து வாங்கி உள்ளார்.

அலர்ட் ஆகிக்கோம்மா
"நீ Alert ஆக வேண்டிய நேரம்.. பாத்து பிழைச்சுக்கோமா!" என கேபிக்கும் அட்வைஸ்களை அள்ளி கொடுத்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். பாலா தங்கச்சின்னு சொன்னதும் அங்கிருந்து இந்த கேங்கில் வந்து சேர்ந்துக் கொண்ட கேபி, எந்த வாரம் வெளியேறுவாங்கன்னு பார்க்க ரசிகர்கள் ஆர்வம்.

டம்மி ரம்மி, ஷிவானி எங்கே?
ஆமாம்.. இந்த டம்மி ரம்மி, ஆஜீத்து, ஷிவானி எல்லாம் எங்கேப்பா? சொல்லாமல் கொள்ளாமல் வெளியே ஓடிட்டாங்களோ? எந்தவொரு புரமோவிலும் காட்டவே இல்லை என பிக் பாஸ் வீட்டில் மீதம் இருக்கும் மிக்சர் தின்னிகளையும் அடையாளம் காட்டி கலாய்த்து தள்ளுகின்றனர். ரம்யா கேப்டன் ஆனதால், அடுத்த வாரம் அவர் சேஃப். கேபி அல்லது ஆஜீத் இருவரில் ஒருவர் தான் வெளியேறுவார் என்று தெரிகிறது.

நிஷா வெளியேற்றம்
நேற்றைய நிகழ்ச்சியில் ஜித்தன் ரமேஷ் வெளியேறியதை கூட நிஷாவை பார்க்க விடாமல் கண்ணாடி சிறைக்குள் அவரை கமல் அடைத்து விட்டார். எப்படியோ சன் டே எபிசோடில் வெளியேறி, வீட்டுக்கே போய் ஜித்தன் ரமேஷை நிஷா சந்திப்பார் என்று தெரிந்து தான் இப்படி பண்ணார் என ஏகப்பட்ட நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ரியோவுக்கு குறும்படம்
அதான் அன்பு கேங்க பிரிச்சாச்சுல.. அப்புறம் என்னப்பா என கமல் கேட்க, அந்த ரியோ விளையாடின நேர்மையான கேமுக்கு குறும்படம் போடுங்க என மக்கள் கேட்பதாக மீம் போட்டு இந்த நெட்டிசன் வேற லெவலில் வச்சு செய்துள்ளார். நிச்சயம் இன்னைக்கு ரியோவுக்கு சவுக்கடி கன்ஃபார்ம்.

அன்பு கேங் பரிதாபங்கள்
"அன்பு கேங் நிலைமை, இப்போ எப்படி இருக்கு கோபி? இரண்டு பேர் எவிக்ட்.. மத்தவங்கள கமல் சார் போட்டு கிழிச்சிட்டு இருக்கார் ரமேஷ்" என பரிதாபங்கள் கோபி மீம் டெம்பிளேட்டையும் போட்டு பங்கமாக வச்சு டரியல் ஆக்கி வருகின்றனர் நெட்டிசன்கள். அன்பை கெட்ட வார்த்தை ஆக்கிய பெருமை அர்ச்சனாவையே சேரும் என்றும் திட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











