படுகவர்ச்சி போட்டோ வெளியிட்ட சமந்தா: சீக்கு கோழின்னு கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
Recommended Video
சென்னை: சமந்தா ஆசையாக வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து அவரின் ரசிகர்களே கலாய்த்துள்ளனர்.
திருமணமான பிறகு கவர்ச்சியான உடை அணியக் கூடாது என்று கூற யாருக்கும் உரிமை இல்லை என்பவர் சமந்தா. அவர் தனது பிகினி மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் கவுன் அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
சமந்தா
சமந்தா ரொம்பவே லோகட் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அதில் அவரின் முன்பகுதியில் எலும்பு தெரிகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஓவராக டயட் இருக்க வேண்டாம், சீக்கு கோழி போன்று இருக்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளனர்.
கவர்ச்சி
ஏன் சமந்தா உங்களுக்கு என்னாச்சு, ஏன் இப்படி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள்?. நடிப்பின் மீது நம்பிக்கை வைத்தால் போதும், இது எல்லாம் தேவையில்லை என்று நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

மீம்ஸ்
நீங்கள் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை வைத்து அசிங்கமாக மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள். அதை பார்க்கும் போது கவலையாக உள்ளது. இனியும் இப்படி செய்யாதீர்கள் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

உடை
உடை விஷயத்தில் மட்டும் நான் என் பேச்சை மட்டுமே கேட்பேன் என்ற முடிவோடு உள்ளார் சமந்தா. அவருக்கு எது பிடிக்கிறதோ அதை செய்கிறார். ஆனால் அதை பலரும் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதை அவர் கண்டுகொள்வது இல்லை.


Click it and Unblock the Notifications











