பொண்ணை காப்பாத்த அம்மா இன்னாம்மா வேலை செய்றாங்க.. ஷிவானி நாமினேஷன் வந்துட்டாங்கள அதான்!

சென்னை: மீண்டும் நாமினேஷனுக்கு ஷிவானி நாராயணன் வந்த நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்னொரு புதிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

சீரியல் நடிகையாக இருந்த ஷிவானி நாராயணன், இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை பதிவிட்டு 2.4 மில்லியன் ரசிகர்களை சேர்த்து வைத்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டுக்கு வந்த பிறகு, ஷிவானியை ரசிகர்கள் கலாய்க்க துவங்கி விட்டனர்.

4 மணி பஸ்

4 மணி பஸ்

சீரியல் நடிகையாக இருந்த ஷிவானி நாராயணன், இன்ஸ்டாகிராமில் 2.4 மில்லியன் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் இளவரசியாக கலக்கி வந்தார். 4 மணிக்கு தினமும் புகைப்படத்தை ஷேர் செய்து வந்த ஷிவானியை 4 மணி பஸ் என ரசிகர்கள் செல்லப் பெயர் வைத்து அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் பிரபலம்

இந்த சீசனில் ஷிவானி நாராயணன் கலந்து கொள்கிறார் என்றதுமே ரசிகர்கள் ரொம்பவே ஆர்வத்துடன் நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கினர். கவர்ச்சி கன்னியாக இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கலங்கடித்த ஷிவானி நாராயணன், பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் அதே வேலையை செய்து வருகிறார். ஒரு சீனிலாவது ஷிவானியை காட்ட மாட்டார்களா என ஏங்கும் ரசிகர்களும் உண்டு.

Recommended Video

அழகினா ACTRESS SNEHA தான் | ACTRESS VIMALA RAMAN CHAT PART-01 | FILMIBEAT TAMIL
பாலாவின் ஷேடோவில்

பாலாவின் ஷேடோவில்

ஓவியா மாதிரி சோலோவாக ஷிவானி நாராயணன், சில விஷயங்களை கேமரா முன்னாடி பண்ணாலே அவரது 2.4 மில்லியன் ரசிகர்கள், தலைவி என அவரை தூக்கி வைத்துக் கொண்டாடி இருப்பார்கள். இளம் போட்டியாளர் என்பதால், பாலாவுடன் ஷேடோவிலே ஷிவானி இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

நாமினேஷன் பட்டியலில்

நாமினேஷன் பட்டியலில்

இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் ஷிவானி இடம் பிடித்துள்ளார். தொடர்ந்து பாலாவுடன் தொடர்பில் இருக்கும் ஆட்களை காலி செய்ய அர்ச்சனா அக்கா மறைமுகமாக திட்டம் தீட்டி விளையாடி வருகிறார் என்றும், பாலாவோட ஸ்கெட்ச் அன்பு கேங்கை காலி பண்ணுவது இல்லை. அவருடைய கேங்கை காலி பண்ணுவது தான் சம்யுக்தாவை தொடர்ந்து ஷிவானி தான் என கணித்து வருகின்றனர்.

இந்த வாரம் அவுட்

இந்த வாரம் அவுட்

மேலும், ஷிவானி நாராயணன் பிக் பாஸ் வீட்டில் மிக்சர் தின்னது போதும், அவரை இந்த வாரமே வீட்டுக்கு அனுப்பி வைத்து, நல்ல நல்ல புதுப்புது இன்ஸ்டாகிராம் போட்டோக்களை பார்க்க ரசிகர்களும் ஆசைப்படுவதாகவும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளும் சமூக வலைதளத்தில் குவிந்து வருகின்றன.

அம்மா செய்த வேலை

அம்மா செய்த வேலை

கடந்த நவம்பர் 18ம் தேதி கடைசியா ஷிவானியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ போட்டிருந்த அவருடைய அம்மா, ஷிவானி நாமினேஷுக்கு வந்த உடன் இன்று அதிரடியாக ஒரு புதிய போட்டோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார். எப்பொதெல்லாம் ஷிவானி பிக் பாஸ் வீட்டில் டல் ஆகிறாரோ, அப்போதெல்லாம் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி ஷிவானிக்கு சப்போர்ட் பண்ண வைத்து வருகிறார் அவரது அன்பு அம்மா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஓட்டுப் போடுவாங்களா?

ஓட்டுப் போடுவாங்களா?

ஷிவானியின் ஆர்மியனர், பாலாவின் ஆர்மியினர் எல்லாம் சேர்ந்து கொண்டு ஷிவானிக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைப்பார்கள் என்றும், 2.4 மில்லியன் ரசிகர்களும் 50 ஓட்டுக்களை போட்டால் ஷிவானி தான் லீடிங்கில் முதல் ஆளாக சேவ் ஆவார் என்றும் ஏகப்பட்ட கணிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

விஜய் டிவி மனசு வைக்கணுமே

விஜய் டிவி மனசு வைக்கணுமே

ஓவியாவுக்கு அத்தனை ரசிகர்கள் இருந்தும், அவரையே அழகா பிளான் பண்ணி விஜய் டிவி பேக் பண்ணி வெளியே அனுப்பியது என்றும், சுரேஷ் சக்கரவர்த்தியை சத்தமே இல்லாமல், திடீரென இந்த சீசனிலும் வெளியே அனுப்பியது போல ஷிவானியை இந்த வாரமே வெளியே அனுப்பி விடுவார்கள் என்றும், இன்னும் விஜய் டிவியின் டி.ஆர்.பி.க்கு அவங்க தேவை என்பதால், கடைசியில் தான் அனுப்புவாங்க என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X