எங்க வீர வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்.. சிம்பு படம் டிராப் ஆனதால் கொதிக்கும் நெட்டிசன்ஸ்.. சம்பவம்!
நடிகர் சிம்புவின் அடுத்த படமும் டிராப் ஆகியுள்ளதால் நெட்டிசன்கள் பலர் அது தொடர்பாக டிவிட் செய்து வைரல் செய்து வருகின்றனர்.
Recommended Video
சென்னை: நடிகர் சிம்புவின் அடுத்த படமும் டிராப் ஆகியுள்ளதால் நெட்டிசன்கள் பலர் அது தொடர்பாக டிவிட் செய்து வைரல் செய்து வருகின்றனர்.
நடிகர் சிம்பு தமிழில் நடிக்கும் கன்னட படமான மப்டி படத்தின் ரீமேக் தற்போது கைவிடப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார்.
படத்தின் ஷூட்டிங்கிற்கு சிம்பு வரவில்லை என்று கூறி படத்தை டிராப் செய்துள்ளனர். இதனால் சிம்பு ரசிகர்கள் பலர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுதான் அப்டேட்
இது டிவிட்டரில் தற்போது வைரலாகி வருகிறது. இவர், எல்லா ஹீரோவிற்கு பட அப்டேட் வரும்.. சிம்புவிற்கு மட்டும்தான் இப்படிலாம் பட அப்டேட் வருது!, என்றுள்ளார்.
ரத்தம்
'மஃப்டி' திரைப்படத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் படபிடிப்புக்கு வரவில்லை என நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்! - செய்தி# எனக்கு வந்தா ரத்தம் உங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா- மைக்கேல் ராயப்பன், என்று இவர் கூறியுள்ளார்.
போங்க பாஸ்
சிவ ராஜ்குமார் படம் ரீமேக், அதுக்கு சிம்பு ஹீரோ, அட போங்க பாஸ் என்று இவர் கமெண்ட் செய்துள்ளார்.
எல்லாம் சகஜம்
எங்க வீர வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம், என்று இவர் கமெண்ட் செய்துள்ளார்.
டிராப் இல்லை
'மஃப்டி' திரைப்படத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் படபிடிப்புக்கு வரவில்லை என நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்! - செய்தி # ஓலா , உபர் கார் காரனுங்க கூட இவ்ளோ ட்ராப் பன்னிருக்க மாட்டானுங்க போல..?! என்று இவர் கிண்டல் செய்துள்ளார்.
என்ன வேலை
இவர் சிம்பு மாம்ஸ் பீ லைக் : என்னையவே வேலை வாங்குறியா நீ?!, என்று கமெண்ட் செய்துள்ளார்.
நல்லது
இவர், நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்.
பட்டுக்கோட்டையின் பாடலுக்கு இன்றும் பொருந்துபவர். நல்ல திறமை இருந்தும் பொழப்பை கெடுத்தவர் தோழர் சிம்பு, என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











