கூலி மீம்ஸ்: சந்திரமுகியில் தேவையே இல்லாத பாம்பு.. தேவையில்லாத கேமியோ.. பாவம் அமீர்கான்!

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளிவந்தது. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்க நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் கூலி திரைப்படம் வசூலில் முதல் நாள் மாஸ் காட்டி, உலகளவில் 160 கோடி வரை வசூல் செய்துள்ளது. இருந்த போதும் இணையவாசிகள் கூலி படத்தை மீம்ஸ் போட்டு வெச்சு செய்துள்ளார்கள். இதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

coolie Review
Photo Credit:

கூலி படத்தை பார்த்த பலர் படம் ரொம்ப மொக்கையாக இருக்கு, நான் எதிர்பார்த்த அளவில் படம் இல்லை. லோகேஷ் கனகராஜ் படம் போலவே இல்லை என பலரும் கூறி வரும் நிலையில் இணையவாசி ஒருவர் லோகேஷ் கனகராஜை கிண்டலடிக்கும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், லியோ படத்தில் விஜய்யை ஊமை குத்தாக குத்தி அனுப்பிவீட்டு, கூலி படத்தில் ரஜினிகாந்தை ஒரே அடியாக அடித்து சாய்த்துவிட்டீர்களே என்பது போல வீடியோ வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

coolie Bayilvan Ranganathan Review
Photo Credit:

தேவையே இல்லாத கேமியோ: மற்றொரு இணையவாசி கூலி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்துவிட்டு, பான் இந்திய படம் என்று சொல்வதற்காகவே படத்தில் அமீர்கான் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை பதிவிடும் வகையில், சந்திரமுகி படத்தில் வரும் பாம்பு காட்சியில் அமீர்கானின் தலையை ஒட்டவைத்து 'தேவையில்லாத கேமியோ.. எதுக்கு இவர் படத்துல? என கிண்டலடித்துள்ளார். அதே போல, யூடியூப் சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் வடிவேலு மீம்ஸ் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதாவது கமல்ஹாசன் லோகேஷூக்கு வாழ்த்து சொல்வது போல அந்த மீம்ஸ் இருக்கிறது.

கிண்டலடிக்கும் ஃபேன்ஸ்: கூலி திரைப்படம் ஆயிரம் கோடியை தொடும் என்று எதிர்பார்ப்பதாக லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். மேலும், அந்த படத்திற்காக அவர் 50 ஆயிரம் கோடியை சம்பளமாக பெற்றதாக கூறியிருந்தார். அதை கிண்டல் செய்யும் வகையில், இணையவாசி ஒருவர், சௌபினுக்கு 100 கோடி.. உபேந்திராவுக்கு 100 கோடி.. நாகார்ஜுனாவுக்கு 200 கோடி.. ரஜினிக்கு 200 கோடி.. அமீர்கானுக்கு 400 கோடி.. ஆக மொத்தம் 1000 கோடி.. சியர்ஸ்' என வடிவேலு காமெடியை மீம்சாக போட்டுள்ளார். இதன் மூலம் படம் வசூலில் ஆயிரம் கோடியை எட்டும் என்று லோகேஷ் சொல்லவில்லை, சம்பளத்தில் ஆயிரம் கோடி என்று தான் சொன்னார் என கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X