குழந்தை வேணும்.. அடம்பிடிக்கும் வனிதா..அத்துமீறும் படுக்கை அறைகாட்சி.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான வனிதா விஜயகுமார் இயக்கி இருக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ராபர்ட் மாஸ்டர் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வனிதா நடித்திருக்கிறார். மேலும்,பாத்திமா பாபு, செஃப் தாமு, ஷகிலா என பலரும் திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் டீசர் வெளியானது. இதில், படுக்கையறை காட்சிகளில் வரம்புமீறி நடித்திருக்கும் வனிதாவை பலரும் திட்டி வருகின்றனர்.
நடிகை வனிதா சந்திரலேகா என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து மாணிக்கம், தேவி என அடுத்தடுத்த படத்தில் நடித்து வந்தார். ஆனால், படவாய்ப்புகள் கிடைக்காமல் போனதால், நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகன் பிறந்த நிலையில், அவரை பிரிந்து, ராஜன் ஆனந்தை திருமணம் செய்தார். பின் அவரையும் பிரிந்தார்.

மிஸ்டர் அண்ட் மிஸஸ்: குடும்ப பிரச்சனை காரணமாக தனியாக இருந்த வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த வனிதா, மூன்றாவதாக பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். எப்படி எப்போதுமே சர்ச்சையுடனே இருக்கும் வனிதா, கடற்கரை ஒன்றில் ராபர்ட் மாஸ்டரின் கையை காதலோடு பிடித்தபடி அமர்ந்திருக்கும் போட்டோவை வெளியிட்டார். அதைப்பார்த்த இணையமே, ஏற்கனவே காதலர்களாக இருந்த இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்தி பரவியது. அதன் பிறகு தான் அது மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தின் ப்ரமோஷன் என்பது தெரியவந்தது.
ஓவர் ரொமான்ஸ்: ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா ஜோடியாக நடித்திருக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தை ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பாளராக களமிறங்க உள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அந்த டீசரில், 40 வயது ஆனா என்ன, எனக்கு குழந்தை வேணும் என்று வனிதா அடம்பிடிக்க, ராபர் மாஸ்டரோ , 40 வயது வந்தாலே பாட்டி, பாட்டி வயதில் உனக்கு குழந்தை வேணுமா என்று நோ சொல்ல இருவருக்கும் இடையே வாக்கு வாதம் வருகிறது. அதுமட்டுமில்லாமல் வனிதா, மெத்தையில் படுத்துக்கொண்டு, ராபர்ட் மாஸ்டரை கட்டிப்பிடித்து செம ரொமான்ஸ் செய்கிறார். இந்த டீசரைப் பார்த்த இணையவாசிகள், வனிதா செய்வது ரொம்ப ஓவர் என்றும், இப்படிப்பட்ட கசமுசா படத்தை அவரோட மகள் ஜோவிகா தயாரிக்கிறார். அது தான் இருப்பதிலேயே கொடுமை என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











